பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்568

                      32
கரிகளை நிகர்த்த வீர முனிவொடு கடியக தமொய்த்த நாளி
                                           முகமுட
னரிகளை யிசைத்த தேரி னெழவெழு தழலுச ரமைத்த னேவி
                                           வருகையி
லெரிகளை நகைத்த கோப மெரிநெடி தெயிறுக டுதைத்த சீய
                                           முகமொடு
வரிகளை யமைத்த தேரி னுயரெழும் வடுவென திருற்று லாவ
                                         மலைகுவார்.
 
கரிகளை நிகர்த்த வீர முனிவொடு, கடிய கதம் மொய்த்த நாளி
                                   முகமுடன்,
அரிகளை இசைத்த தேரின் எழ, எழுது அழலு சரம் மைத்தன் ஏவி
                                   வருகையில்,
எரிகளை நகைத்த கோபம் எரி நெடிது எயிறுகள் துதைத்த சீய
                                   முகமொடு,
வரிகளை அமைத்த தேரின் உயர் எழும் வடுவன் எதிர் உற்று,
                                   உலாவ மலைகுவார்.

     யானைகளுக்கு இணையான வீரச் சினத்தோடும், கடுமையாகச் சினம்
திரண்டு நிற்கும் நாய் முகத்தோடும், சிங்கங்களைப் பூட்டிய தேர் மீது ஏறி
வந்து, எழுப்பும்போதே நெருப்பைக் கக்கும் அம்புகளை மைத்தன் ஏவிய
வண்ணம் வந்தான். அப்பொழுது, நெருப்புகளை இகழ்ந்த சினம் எரியவும்,
நெடிய தன் பற்களைக் கடித்துக்கொண்டு வரும் சிங்க முகத்தோடும்,
புலிகளைப் பூட்டிய தேரின்மேல் ஏறிவரும் வடுவன் அவனை எதிர்
கொண்டான். எனவே, இருவரும் தேரை அங்குமிங்குமாக உலாவச்
செலுத்தித் தமக்குள் போரிடுவர்.

                      33
அழலெழ வளைத்த சாப நிமிரில வரைநொடி முடித்தி லாது
                                        விடுகணை
நிழலெழ மருட்டு வான மிருளுற நிரைநிரை யெதிர்த்த கூளி
                                        யணியணி
புழலெழ வுரைத்த வாளி வழிவழி புனலென விரத்த மோட
                                        மலைமுதல்
சுழலெழ வுயிர்ப்பு வீசி மெலிவில சுனகமு கன்முட்டி நீடு
                                        முனைகுவான்.