பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்569

அழல் எழ வளைத்த சாபம் நிமிர் இல அரை நொடி முடித்து
                               இலாது விடு கணை
நிழல் எழ மருட்டு வானம் இருள் உற, நிரை நிரை எதிர்த்த கூளி
                               அணி அணி
புழல் எழ உரைத்த வாளி வழி வழி புனல் ஏன் இரத்தம் ஓட,
                               மலைமுதல்
சுழல் எழ உயிர்ப்பு வீசி, மெலிவு இல, சுனக முகன், முட்டி நீடு
                               முனைகுவான்.

     நாய் முகங்கொண்ட மைத்தன், நெருப்புப் பிறக்க வளைத்த வில்
நிமிர்தல் இல்லாமல் அரை நொடி முடியு முன்னே ஏவிய அம்புகள் நிழல்
எழுமாறு மறைத்த வானத்தில் இருள் உண்டாகவும், வரிசை வரிசையாக
நின்று எதிர்த்த பேய்களின் படையணிகளின் மீது துளை உண்டாக மோதிய
அம்பு தைத்த இடங்களினின்று ஆறுபோல் இரத்தம் வடிந்து ஓடவும்,
மலைகள் முதலாய்ச் சுழன்று பெயருமாறு பெருமூச்சுவிட்டு, மெலியாமல்
மோதி நெடு நேரம் போரிடுவான்.

                     34
நெடுமலை திரட்டி நீள வமைவன நெடியசி லையுற்ற வீர
                                         வடுவனுங்
கொடுமலை சுருட்டி யாய விருபுயக் குவடெழ வளைத்த சாப
                                         மழைவிடத்
தொடுமலை யுயர்த்த நேமி யுருவவுந் துறுவிசை யின்மைத்த
                                   னேவு கணையொடு
கடுமலை யிழைத்த சாப மிறுவது கடிதில வனக்கு நீடு
                                         குமுறவே.
 
நெடு மலை திரட்டி நீள அமைவன நெடிய சிலை உற்ற வீர
                                  வடுவனும்,
கொடு மலை சுருட்டி ஆய இரு புயக் குவடு எழ வளைத்த சாப
                                  மழை விட,
தொடு மலை உயர்த்த நேம உருவவும் துறு விசையின் மைத்தன்
                                  ஏவு கணையொடு,
கெடு மலை இழைத்த சாபம் இறுவது, கடிதில் அவன் நக்கு நீடு
                                  குமுறவே.

     நெடிய மலையைத் திரட்டி நீளமாக அமைத்தது போன்ற நெடிய
வில்லைத் தாங்கிய வீரங்கொண்ட வடுவனும், கொடிய மலைகளைச் சுருட்டி
அமைத்தன போன்ற தன் இரு புயங்கள் நிமிர வளைத்த வில்லினின்று