|
அம்பு
மழையைப் பொழியவே தொடுப்பாக மலைகளை உயர்த்தி
நின்ற பூமியையும் ஊடுருவத்தக்க, மிக்க விசையோடு மைத்தன் ஏவிய
அம்பினால், அவ்வடுவன் கடுமையாக நகைத்து நெடு நேரம் குமுறுமாறு,
கடுமையான மலையை இழைத்துச் செய்தது போன்ற அவ் வில்லும்
ஒடிதலாயிற்று.
| 35 |
சினமொடு
முடற்றி நீடு கையிலிடிச் சினைமுகில் பறித்து நேமி
யெனவெறிந்
தினமொடு மெதிர்த்த கூளி வெருவுற விடியொடு சுழற்றி வீச
வடுவனே
மனமொடு பழுத்த தீயை யுமிழ்வன வடியக ணைமைத்த னேவி
யெழுதினன்
கனமொடு மெரித்த வேறு துகளெழக் கடறிரை சுருட்டி யோடி
மெலியவே. |
| |
சினமொடும் உடற்றி,
நீடு கையில் இடிச் சினை முகில் பறித்து நேமி
என எறிந்து,
இனமொடும் எதிர்த்த கூளி வெரு உற இடியொடு சுழற்றி வீச,
வடுவனே,
மனமொடு பழுத்த தீயை உமிழ்வன வடிய கணை, மைத்தன், ஏவி
எழுதினன்,
கனமொடும் எரித்த ஏறு துகள் எழ, கடல் திரை சுருட்டி ஓடி
மெலியவே |
அது கண்ட வடுவன்,
சினத்தோடு போரிட்டு, இடியைக் கருக்
கொண்டுள்ள மேகத்தைத் தனது நீண்ட கையால் பறித்தெடுத்துச்
சக்கராயுதமாக மைத்தன் மேல் எறிந்து, கூட்டமாக எதிர்த்த பேய்கள்
அஞ்சுமாறு சில மேகங்களை இடியோடு கழற்றி வீசவே, மைத்தன்,
மேகத்தோடும் எரிக்கும் தன்மையுள்ள இடிகள் தூளாகிப் பறக்கவும், கடல்
தனது அலைகளைச் சுருட்டிக் கொண்டு மெலிந்து ஓடவும், தன் மனத்தில்
பழுத்த தீயை உமிழ்வது போன்ற கூர்மையான அம்புகளை அவன் மீது
ஏவி எழுப்பி விட்டான்.
|