பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்571

                   36
புடவியை யனைத்தும் வேரோ டசைவன புதவழல் கொளுத்து                                     சூல மிருகையிற்
றடவிய றுகக்க டாவி யுழுதன சடவடு வனிட்ட காலை                                     யெதிர்வன
நடவிய வயத்த தேரும் வெறியின நகுவவ ழல்பற்றி நீற                                     முகில்புழை
யிடவிரை வின்மைத்தன் மீதி லெழவிடி யெனமுனர் குதித்து                                     வீழ வுறுமினான்.
 
புடவியை அனைத்தும் வேரோடு அசைவன, புதவு அழல் கொளுத்து
                                   சூலம் இரு கையில்
தடவி இறுகக் கடாவி, உழுது அன சட வடுவன், இட்ட காலை,
                                   எதிர்வன
நடவிய வயத்த தேரும், வெறி இனம் நகுவ, அழல் பற்றி நீற, முகில்
                                   புழை
இட விரைவின் மைத்தன் மீதில் எழ, இடி என முனர் குதித்து வீழ                                    உறுமினான்.

     உழுது விட்டாற் போன்ற வஞ்சகம் படைத்த வடுவன், அது கண்டு,
உலகம் அனைத்தையும் வேரோடு அசைக்கக்கூடியதும், நரக நெருப்பைக்
கொளுத்தியது போன்றதுமான ஒரு சூலாயுதத்தைத் தன் இரு கைகளாலும்
இறுகப் பிடித்து ஏவி விட்டான், அப்பொழுது, எதிர் முகமாக மைத்தன்
செலுத்தி வந்த வலிமையான தேரும், பேய்க் கூட்டங்கள் நகைக்குமாறு,
நெருப்புப் பிடித்துச் சாம்பலாகவே, மேகத்தில் துளை உண்டாகுமாறு
மைத்தன் விரைவில் வானத்தின்மீது எழுந்து நின்று, பின் இடி போல
அவன் முன்னே குதித்து விழுந்து உறுமினான்.

                   37
உறுமியு ருமொத்த வீரன் வடுவனுந் துயருமி ரதத்தை வாரி
                                      முகிலறத்
துறுமிசை சுழற்றி வீசு விசையொடு துறுவிய ழல்பற்றி வேக
                                      வெறிதரத்
தெறுமிடி யினத்து வேக வினமுகில் திசைதிசை யனைத்தும்
                                      வேக விருவிழி
யிறுமெரி யழற்றி வேக வெரிமழை யெனவிழுஞ் சினத்த சீய
                                      வதனனே.