பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்572

உறுமி உரும் ஒத்த வீரன், வடுவன் உந்து உயரும் இரதத்தை வாரி,
                                  முகில் அறத்
துறு மிசை சுழற்றி வீசு விசையொடு துறுவி அழல் பற்றி வேக எறி தர,
தெறும் இடி இனத்து வேக இன முகில், திசை திசை அனைத்தும்
                                  வேக, இரு விழி
இறும் எரி அழற்றி வேக, எரி மழை என விழும், சினத்த சீய
                                  வதனனே.

     இடியைப் போன்ற வீரனாகிய மைத்தன் அவ்வாறு உறுமிக் கொண்டு,
வடுவன் செலுத்திக்கொண்டிருந்த உயரமான தேரை வாரியெடுத்து, திரண்ட
மேகங்கள் விலகுமாறு வானத்தில் சுழற்றி விசிய விசையினால் நெருப்புத்
திரண்டு பற்றி வேகுமாறு எறிந்தான். அப்பொழுது, சினங்கொண்ட
சிங்க முகம் படைத்த வடுவன், கூட்டமான மேகங்கள் தாக்கும் இடிக்
கூட்டங்களோடு வேகவும், திசைகள் அனைத்தும் ஒருங்கு வேகவும், தனது
இரு கண்களும் கொல்லும் தன்மை வாய்ந்த நெருப்பைக் கக்கி வேகவுமாக,
நெருப்பு மழை போலக் கீழே விழுவான்.

     'துறு முகில் அற' என மாற்றிக் கூட்டுக.

                 பேய்களின் மெலிவு

     புளிமா, கருவிளம், புளிமா, கருவிளம், புளிமா, கருவிளம், கருவிளம்.

                     38
அழல மதகரி யழல வயபரி யழல வுருளொடு திகிரிக
ளழல விரிசிலை யழல முனிகணை யழல வடியயி லழலவா
ளழல விருவிழி யழல மறமன மழல விருசெவி யழலவா
யழல வடையலு மழலு மிருவரு மழலு மிருகதை யொடுபொர.
 
அழல மத கரி, அழல வய பரி, அழல உருளொடு திகிரிகள்,
அழல விரி சிலை, அழல முனி கணை, அழல வடி அயில், அழல
                                          வாள்,
அழல இரு விழி, அழல மற மனம், அழல இரு செவி, அழல வாய்,
அழல அடையலும், அழலும் இருவரும் அழலும் இரு கதையொடு
                                          பொர.