|
| 40 |
உயர மதகரி
சுழல வெறிகுவ ருழுவை யுருவொடு முகளுவர்
பெயர வவர்கவர் வயிர நெடுவரை பிளவ வுரமுழு தெறிகுவ
ரயர விரிகுவர் குருதி மலியன வலியை முழுகுவர் சினமலி
துயர முகமொடு தசையை யுணவுண வுதிர முமிழுவர் சொரியவே. |
| |
உயர மத கரி
சுழல எறிகுவர்; உழுவை உருவொடும் உகளுவர்;
பெயர அவர் கவர் வயிர நெடு வரை பிளவ உரம் உழுது எறிகுவர்;
அயர இரிகுவர்; குருதி மலி அன அலையை முழுகுவர்; சினம் மலி
துயர முகமொடு, தசையை உணஉண, உதிரம் உமிழுவர் சொரியவே. |
அவ்விருவரும்
மத யானைகளை எடுத்துச் சுழற்றி உயரத்து எறிவர்;
புலி உருவ மெடுத்துப் பாய்வர்; அவரவர் பெயர்த்தெடுத்த நெடிய வைர
மலையை எதிரியின் மார்பை உழுது பிளக்குமாறு எறிவர்; சோர்வினால்
விலகிச் செல்வர்; உதிரம் மலிந்த அக்கடலில் முழுகுவர்; சினம் நிறைந்த
துயரமுகத்தோடு, ஊனை உண்டு உண்டு, வாயினின்று உதிரம் சொரிய
உமிழுவர்.
| 41 |
முறையி லொலியொடு
முரசு முருடொடு முழவு கடமொடு
மொலியெழும்
பறையி னொலியொடு மிரத வுருளொடு பரிகள் கரியொடு
மொலியெழக்
கறையி னொலியொடு முவணி யயிலொடு கதைகள் சிலையொடு
சிலைபொழி
யுறையி னொலியொடு முகிலி னொலியொடு முவரி யொலிமெலி
வனவெனா |
| |
முறை இல் ஒலியோடு,
முரசு முருடொடு முழவு கடமொடும் ஒலி
எழும்,
பறையின் ஒலியொடும், இரத உருளொடு, பரிகள் கரியொடும் ஒலி எழ,
கறையின் ஒலியொடும், உவணி அயிலொடு, கதைகள் சிலையொடு,
சிலை
பொழி
உறையின் ஒலியொடு, முகிலின் ஒலியொடும் உவரி ஒலி மெலிவன
எனா. |
|