பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்575

     பறையின் ஒலியோடு, தேர் உருளைகளின் ஒலியும், குதிரைகள்
யானைகளின் ஒலியும் கூடி எழவும், குருதி பெருக்கெடுத்து ஓடும் ஒலியோடு, வாள்கள் வேல்களும் கதாயுதங்கள் வில்லுகளும் எழுப்பும் ஒலி, அவ்வில்லுகள் பொழியும் அம்பு மழையின் ஒலியோடும் கூடி, மேகத்தின் இடியோசையோடு கடலின் அலையோசையும் மெலியும் என்று சொல்லத்தக்க வகையில், ஒரு முறையோடு அமையாத ஒலியாக, முரசு முருடு முழவு கடம் போன்ற போர் வாத்தியங்களின் ஒலியும் சேர்ந்து எழும்.


                   42
பிழையின் வழிவழி துயரின் மலியன பெருவில் வழிவழி
                                    கணையதின்
புழையின் வழிவழி குருதி மலியன பொறையின் வழிவழி
                                    புனலென
மழையின் வழிவழி யிடியின் மலியன படையின் வழிவழி
                                    யெரிமனத்
துழையின் வழிவழி வெகுளி மலியன வுரையின் வழிவழி
                                    யிணையிலா.
 
பிழையின் வழி வழி துயரின் மலியன பெரு வில் வழி வழி கணை;
                                    அதின்
புழையின் வழி வழி குருதி மலியன பொறையின் வழி வழி புனல்
                                    என;
மழையின் வழி வழி இடியின் மலியன படையின் வழி வழி எரி;
                                    மனத்து
உழையின் வழி வழி வெகுளி, மலியன உரையின் வழி வழி இணை
                                    இலா.

     பெரிய வில்லுகளினின்று பாயும் அம்புகள், பாவத்தின் வழியாக
வழிந்தோடும் துயரங்கள்போல் மிகவும், மலையினின்று வழிந்தோடும்
ஆறு போல், அவ்வம்பினால் ஏற்பட்ட துளைகளின் வழியாக வழிந்தோடும்
குருதிகள் மிகவும், மோதிய படைக்கலங்களினின்று பெருகி எழும்
நெருப்புகள் மேகத்தினின்று பிறக்கும் இடி போல் மிகவும், அப்பேய்களின்
மனத்தினின்றுபக்கமெல்லாம் பரவ வழிந்தோடும் சினங்கள், சொல்லின்
மூலம் காட்டும் எம்முறைக்கும் ஒப்பற்ற விதமாய் மிகவும்.

     'மலியன' என்பது எச்சமாகி அடுத்த பாடலுடன் தொடர்ந்து முடிவு
பெறும்.