பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்576

                      43
இனைய வடையலு நரக வெறியின மியல விடையிடை யடலம
ரனைய வலியொடு புரிய வளனுட னரிய துணைவியும் வெருவுறா
சினைய சனிமுகில் மெலிய வெரிவெறி சினவி யெழவெழ
                                          வரிதிடர்
புனைய வுளைவன புகைய வெருவன பொருதல் வெறிதென
                                          மெலிவன.
 
இனைய அடையலும், நரக வெறி இனம், இயல இடை இடை அடல்
                                             அமர்,
அனைய வலியொடு, புரிய, வளமுடன் அரிய துணைவியும் வெரு உறா,
சினை அசனி முகில் மெலிய எரி வெறி, சினவி எழ எழ, அரிது இடர்
புனைய உளைவன; புகைய வெருவன; பொருதல் வெறிது என மெலிவன.

     நரகப் பேய்க் கூட்டம் இவை யாவும் நிகழுமாறு, அத்தகைய
வலிமையோடு இடையிடையே வலிய போரைச் செய்யவும், சூசையோடு
அரிய துணைவியாகிய மரியாளும் அச்சம் கொள்ளாமையால், இடியைச்
சூலாகக் கொண்டுள்ள மேகமும் மெலியுமாறு எரிந்த பேய்கள்,
சினங்கொண்டு எழுந்து எழுந்து, நீக்குதற்கரிய இடர்கொண்டு உளையும்;
மனம் புகைந்து அஞ்சும்; போரிடுதல் வீணென்று மெலியும்.

            மாயை கண்ட சூசையின் சிந்தனை

     - விளம், - விளம், - மா, கூவிளம்.

              44
இன்னியா வையுமுளத் திரங்கி மூவரு
மின்னிலா வமரரும் விழித்துற் றாரலாற்
றுன்னியார் கலியுடை சூழ்ந்த பாருளோ
ரன்னியா வையுமொருங் கறிந்தி லாயினார்.
 
இன்ன யாவையும், உளத்து இரங்கி, மூவரும்,
மின் நிலா அமரரும், விழித்து உற்றார் அலால்,
துன்னி ஆர்கலி உடை சூழ்ந்த பார் உளோர்,
அன்ன யாவையும் ஒருங்கு அறிந்து இல் ஆயினார்.