|
சூசையும்
மரியாளும் திருக் குழந்தையுமாகிய மூவரும், மின்னல்
போல் ஒளி படைத்த வானவரும், தம் மனத்துள் இரங்கி, இவை
யாவற்றையும் கண்ணுறக் கண்டனரேயல்லாமல், கடல் தனக்கு உடையாக
நெருங்கிச் சூழ்ந்துள்ள மண்ணுலகில் உள்ளோர் அவை யாவற்றையும்
முற்றும் அறியாதவர் ஆயினார்.
இன்ன
யாவை, அன்ன யாவை என்பன, தொகுத்தல் விகாரமாய்,
இன்னியாவை, அன்னியாவை என நின்றன. மாயப் போராதலின், பிற
மனிதர் கண்டிலர்.
| 45 |
பொன்வளர்
வயிரநற் பொருப்பிற் போன்றுளம்
மின்வள ருணர்வினால் விளங்கு மாதவன்
கொன்வளர் வஞ்சகக் குணுங்கின் மானயகண்
டின்வள ரிரக்கமிக் கெண்ணி யோதினான். |
| |
பொன் வளர்
வயிர நல் பொருப்பின் போன்று, உளம்
மின் வளர் உணர்வினால் விளங்கு மாதவன்,
கொன் வளர் வஞ்சகக் குணுங்கின் மாயை கண்டு,
இன் வளர் இரக்கம் மிக்கு, எண்ணி ஓதினான்: |
பொன்னாலாகிய
உறுதி வாய்ந்த மலையைப் போன்று, மின்னலொளி
போல் வளர்ந்த உணர்வினால் தன் உள்ளம் விளங்கும் பெருந்
தவத்தோனாகிய சூசை, வீணே வளர்க்கும் வஞ்சகப் பேயின் மாயச்
செயலைக் கண்டு, இனிதாக வளரும் இரக்கம் மிகுந்து, அதனால்
வரவிருக்கும் கேடு நினைந்து, பின் வருமாறு சொல்லத் தொடங்கினான்;
| 46 |
ஒழுங்கிய
மருப்பினை யொலுக்கி யெந்தையான்
மழுங்கிய வயத்தபேய் வஞ்ச மாறிலா
புழுங்கிய கடையுகம் பொருவப் பாரெலாம்
விழுங்கிய தெனமுனை விளைத்த வீடிதோ. |
| |
"ஒழுங்கிய மருப்பினை
ஒலுக்கி, எந்தையால்
மழுங்கிய வயத்த பேய், வஞ்சம் மாறு இலா,
புழுங்கிய கடை யுகம் பொருவ, பார் எலாம்
விழுங்கியது என, முனை விளைத்த ஈடு இதோ? |
|