|
"எம் தந்தையாகிய
ஆண்டவனால் வலிமை மழுங்கிய பேய்கள்,
வரிசையாய் அமைந்த தம் கொம்புகளை மீண்டும் நிமிர்த்திக் கொண்டு,
தம் வஞ்சகப் போக்கு மாறாமல், வெந்து புழுங்கிய உலக முடிவு காலம்
போல, உலகம் முழுவதையும் விழுங்கிய தன்மையாய், போர் தொடுத்த
வல்லமையோ இது?
| 47 |
மின்முதல்
முகிலொடு விசும்பி யாவையும்
பொன்முதல் மணிகிளர் புணரி யாவையுங்
கன்முத லீங்கெலாங் கனன்று சுட்டெனாப்
புல்முதன் சிதைந்ததோர் பொருளிங் காயதோ. |
| |
"மின் முதல்
முகிலொடு விசும்பு யாவையும்,
பொன் முதல் மணி கிளர் புணரி யாவையும்,
கல் முதல் ஈங்கு எலாம் கனன்று சுட்டு எனா.
புல் முதல் சிதைந்தது ஓர் பொருள் இங்கு ஆயதோ? |
"மின்னல் முதலாக
மேகத்தோடு கூடிய வானத்திலுள்ள யாவையும்,
பொன் முதலாகப் பல வகை மணிகளும் தோன்றும் கடலிலுள்ள யாவையும்,
கல் முதலாக இம் மண்ணுலகிலுள்ள எல்லாம் எரிந்து சுட்டவும் போல்
தோன்றினும், அதனால் புல் முதலாக இங்கு அழிவுற்ற ஒரு பொருள்
உண்டோ?
'ஆயதோ' என்ற
சொல்லின் ஓகாரம், எதிர்மறையாய், 'இல்லை'
என்பது குறித்தது.
| 48 |
விண்ணின்மேல்
வைத்தநன் றிழந்த வெம்பழி
மண்ணின்மேல் வைத்தமன் னுயிரின் வைத்தபேய்
கண்ணின்மேல் வைத்தமா சென்னக் காட்டிய
வெண்ணின்மேல் வைத்தவட் கியற்று மாயமே. |
|