|
"இருளை
விரும்பிய மயக்கத்தின் திறத்தால் போரை மேற்கொள்ளும்
பேய், இரவில் பொய்யின் வல்லமையோடு பொருந்திய தீய கனவைத்
தோற்றுவித்து, இம்மண்ணவர் மெய்யின் திறத்தோடு பொருந்திய உணர்வு
நீங்குமாறு செய்து, இவ்வகையாய் அல்லவா தீமை விளைவிக்கும்?
முன் 'பார்
சிதையும்' என்றமையின், இங்கு 'அவர்' என்றது 'பார்
அவர்' என இசைந்து, மண்ணவரைக் குறிக்கும்.
| 51 |
ஆசைசெய்
சேயர்க்கொன் றலக்கண்
செய்குவேன்
மாசைசெய் நலமற மிடிவ குக்குவேன்
பூசைசெய் தெனைவணங் கிலாத் போதெனா
வோசைசெய் யுவரிபோ லுரைக்கும் பேய்களே. |
| |
"ஆசை செய் சேயர்க்
கொன்று அலக்கண்
செய்குவேன்;
மாசை செய் நலம் அற மிடி வகுக்குவேன்,
பூசை செய்து எனை வணங்கு இலாத போது' எனா,
ஓசை செய் உவரி போல் உரைக்கும் பேய்களே. |
"பேய்கள், 'வழிபாடு
செய்து என்னை வணங்குதல் இல்லாத போது,
நீங்கள் ஆசை வைத்துள்ள புதல்வரைக் கொன்று துன்பம் விளைவிப்பேன்;
பொன்னால் ஆகும் நலம் நீங்குமாறு உங்களுக்கு வறுமை உண்டாக்குவேன்',
என்றெல்லாம், ஒலிக்கும் கடல் போல் முழங்கிக் கனவில் உரைக்கும்.
'கனவில்' என்பது,
முந்திய பாடல் தொடர்பால் கொள்ளப்பட்டது.
| 52 |
ஒலித்தலா
லெவன்செயு முவரி பேயினங்
கலித்தலா லெவன்செயுங் கடவுட் சார்ந்தகாற்
சலித்தலா லெவன்செயும் பிணித்த தன்மையின்
வலித்தநாய் கடிக்குமோ மருவி லாமையே. |
| |
"ஒலித்தலால்
எவன் செயும் உவரி? பேய் இனம்,
கலித்தலால் எவன் செயும், கடவுட் சார்ந்த கால்?
சலித்தலால் எவன் செயும்? பிணித்த தன்மையின்
வலித்த நாய், கடிக்குமோ, மருவு இலாமையே. |
|