பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்581

     "கடல் ஒலிப்பதனால் மண்ணை என்ன செய்துவிடும்? நாம்
கடவுளைச் சரணாகச் சார்ந்தவிடத்து, பேய்க்கூட்டம், முழங்குவதனால்
என்ன செய்துவிடும்? சலித்துக் கொள்வதன் மூலமும் என்ன செய்துவிடும்?
சங்கிலியால் கட்டிய நிலையில் அதனை இழுத்து நின்ற நாய், நாம் அதனை
நெரங்காதவிடத்து, நம்மைக் கடிக்குமோ?

     'ஒலித்தக்கால் என்னாம் உவரி' என்ற திருக்குறள் அடி (763) வேறு விளக்கத்தோடு இங்கு எடுத்தாளப்பட்டுள்ளது.

                53
பிணிப்பருங் குணத்தொடு பிணிபெ யர்த்தறக்
குணிப்பரு நலந்தருங் கொள்கை பேசுமால்
துணிப்பருந் தந்துயர் துடைக்க லாற்றிலா
தணிப்பரு நரசழற் றழலத் தாழ்ந்தபேய்.
 
"பிணிப்பு அருங் குணத்தொடு, பிணி பெயர்த்து, அறக்
குணிப்பு அரு நலம் தரும் கொள்கை பேசும் ஆல்,
துணிப்பு அருந் தம் துயர் துடைக்கல் ஆற்று இலா,
தணிப்பு அரு நரகு அழல் தழலத் தாழ்ந்த பேய்.

     "விலக்குவதற்கு அரிய தம் துயரையே துடைக்க இயலாமல்
தணித்தற்கு அரிய நரக நெருப்பு மூண்டெரிய அதனுள் ஆழ்ந்து
கிடக்கும் பேய்கள், கட்டுப்படுத்துதற்கு அரிய குணத்தோடு, மனிதர்
கொண்ட நோயை நீக்கி, அறவே கருதுதற்கு அரிய நன்மையையும்
தருவதாகிய கருத்தை எடுத்துரைத்து நிற்கும்.

     'ஆல்' அசைநிலை.

              54
சுட்டிடை நரகுழி புதைத்த சோகுவா
னட்டிடை தளர்ந்தனர்க் குறுதி நல்கலே
நெட்டிடை நெறிகளி லுதவி நேடினர்க்
கட்டிடை கரவர்வந் தமைதல் போலுமே.
 
"சுட்டு, இடை நரகு உழி புதைத்த சோகு, வான்
நட்டு இடை தளர்ந்தனர்க்கு உறுதி நல்கலே,
நெட்டு இடை நெறிகளில் உதவி நேடினர்க்கு,
அட்டு இடை கரவர் வந்து அமைதல் போலுமே.