|
"தீயால் சுடப்பட்டு,
தமக்குரிய இடமாக நரகத்தில் புதைக்கப்பட்டுள்ள
பேய்கள், வானுலகத்தை நாடி இடையே தளர்ந்தவர்க்கு உறுதி தர
முற்படுதல், நெடிதாக இடங்கொண்ட வழிகளில் உதவி தேடியவர்க்கு
இடையே கள்வர் தாக்கி வந்து துணையாய் அமைவது போலாகும்.
| 55 |
வெம்பிய
வஞ்சனை விளங்கி லாமையாற்
பம்பிய புரைபுனைந் தேய்த்த பாருளோர்
நம்பிய வெறியொடு நரகில் வீழ்வரென்
றம்பிய கொடியினோ னழுதி ரங்கினான். |
| |
"வெம்பிய வஞ்சனை
விளங்கு இலாமையால்,
பம்பிய புரை புனைந்து, ஏய்த்த பார் உளோர்,
நம்பிய வெறியொடு நரகில் வீழ்வர்" என்று,
அம்பிய கொடியினோன் அழுது இரங்கினான். |
"வெம்பிச் செய்த
இவ்வஞ்சனை தமக்கு விளங்காமையால்,
ஏய்க்கப்பட்ட இவ்வுலகத்தவர், நிறைந்த பாவங்களை அணிந்து கொண்டு,
தாம் நம்பியிருந்த பேய்களோடு தாமும் நரகில் வீழ்வர்" என்று கூறி, தளிர்
கொண்டுள்ள மலர்க் கொடியைத் தாங்கிய சூசை அழுது வருந்தினான்.
பேய்களின்
தோல்வி
- மா, கூவிளம்,
கூவிளம், கூவிளம்
| 56 |
நற்றி றத்துந
ரர்க்குமி னைந்தபின்
செற்றி றத்தொலி சீறிய பேய்செட
விற்றி றத்துவி யன்றவ மேந்தியம்
பிற்றி றத்தில றத்தொடை யேற்றினான். |
| |
நல் திறத்து,
நரர்க்கும் இனைந்த பின்,
செல் திறத்து ஒலி சீறிய பேய் கெட,
வில் திறத்து வியன் தவம் ஏந்தி, அம்-
பின் திறத்து அறத் தொடை ஏற்றினான். |
|