|
சூசை
இவ்வாறு நன்மையைச் சார்ந்து நின்று, மனிதர் பொருட்டு
வருந்திய பின், மேகம் போல் முழக்கொலியோடு சீறிய பேய்கள் போரில்
கெடுமாறு, வில்லின் தன்மையாகப் பெருந் தவத்தை ஏந்தி, அம்பின்
தன்மையாக அறத்தை ஏற்றித் தொடுத்தான்.
'அம்பின் றிறத்தில்'
என்பது, எதுகை ஓசைப் பொருட்டு, 'அம்பிற்
றிறத்தில்' என நின்றது. 'தொடை ஏற்றினான்' என்பதனை, 'ஏற்றித்
தொடுத்தான்' எனக் கொள்க.
| 57 |
கடிந டுக்கிய
கள்ளவிழ் கானலர்க்
கொடிந டுக்கிய கோடில மாதவன்
படிந டுக்கிய வெம்பழிப் பேயெலா
மடிந டுக்கிய வாண்மையி னோக்கினான். |
| |
கடி நடுக்கிய,
கள் அவிழ் கான் அலர்க்
கொடி நடுக்கிய கோடு இல மா தவன்,
படி நடுக்கிய வெம் பழிப் பேய் எலாம்
அடி நடுக்கிய ஆண்மையின் நோக்கினான். |
பேய்களை நடுங்கச்
செய்யுமாறு, தேன் விரியும் தன் மணமலர்க்
கொடியை அசைத்த குற்றமற்ற பெருந் தவத்தோனாகிய சூசை, இவ்வுலகை
நடுங்கச் செய்த கொடிய பழியைக் கொண்டுள்ள பேய்களையெல்லாம்
அடியோடு நடுங்கச் செய்யும் வீரத்தோடு நோக்கினான்.
'நடுக்கிய'
என்பது, முதல் அடியில், 'செய்யிய' என்னும் வாய்பாட்டு
வினையெச்சமாகவும், ஏனைய அடிகளில், 'செய்த' என்னும் வாய்பாட்டுப்
பெயரெச்சமாகவும் கொள்க.
| 58 |
நோக்கி
னான்கழு தாண்மையை நூறினான்
றாக்கி னானற வெஞ்சரப் பற்றொடை
போக்கி னான்கடி போக்கிய வேலெலா
நீக்கி னானிமிர் வச்சிர நெஞ்சினான். |
| |
நோக்கினான்,
கழுது ஆண்மையை நூறினான்;
தாக்கினான், அற வெஞ்சரப் பல் தொடை
போக்கினான், கடி போக்கிய வேல் எலாம்
நீக்கினான், நிமிர் வச்சிர நெஞ்சினான். |
|