65 |
கெலிப்ப
டக்கனி யெந்தைகி ளைத்தசொற்
கலிப்ப டக்கலங் கிக்கடி யீட்டமே
வலிப்ப டக்கனங் காலிடி மானவார்ப்
பொலிப்ப டக்கன லூடுற வீழ்ந்ததே. |
|
கெலிப் படக்
கனி எந்தை கிளைத்த சொல்
கலிப் பட, கலங்கிக் கடி ஈட்டமே,
வலிப் படக் கனம் கால் இடி மான ஆர்ப்பு
ஒலிப் பட, கனல் ஊடு உற வீழ்ந்ததே. |
சூசைக்கு வெற்றி
ஏற்பட கனிவுள்ளம் கொண்ட நம் தந்தையாகிய
குழந்தை நாதனிடமிருந்து பிறந்த சொல்லின் ஓசை செவியிற் படவுமே,
பேய்க் கூட்டம் முழுவதுமே கலங்கி, மேகம் வலிமையோடு உமிழும்
இடியைப் போன்று முழக்கொலி ஏற்படுத்தி, நரக நெருப்பின் ஊடே
அழுந்த விழுந்தது.
சூசை
பெற்ற வரம்
66 |
எல்லின்
மாரியு மேந்திய வான்புகழ்ச்
சொல்லின் மாரியுந் தூய்மலர் மாரியுஞ்
செல்லின் மாரியின் வானவர் சிந்தலின்
வில்லின் மாரியி னாதன்வி ளம்பினான். |
|
எல்லின் மாரியும்,
ஏந்திய வான் புகழ்ச்
சொல்லின் மாரியும், தூய் மலர் மாரியும்,
செல்லின் மாரியும், வானவர் சிந்தலின்,
வில்லின் மாரியும் நாதன் விளம்பினான் : |
மேகம் பொழியும்
மழை போல, ஒளி மழையும், நாவில் தாங்கிய
உயர்ந்த புகழ்ச் சொல்லின் மழையும், தூய மலர்களின் மழையும் வானவர்
பொழிந்து கொண்டிருக்கையில் கதிரொளியை மழை போற் பொழியும்
குழந்தை நாதன், சூசையை நோக்கி, இவ்வாறு சொல்லலானான் :
|