|
| 69 |
அல்லின்
வண்ணத் துடலோ ரணியாத் திரண்டு பிரியா
தெல்லின் வண்ணத் தெரிவா டணரா திணைந்து திரிய
வில்லின் வண்ணத் தொளிர்தெண் டிரைமேன் மிளிர்மின்
னொடுமேய்
செல்லின் வண்ணத் தெவணுந் திரண்டு மிதக்கக் காண்பார். |
| |
"அல்லின் வண்ணத்து
உடலோர், அணியாத் திரண்டு பிரியாது,
எல்லின் வண்ணத்து எரி வாள் தணராது இணைந்து திரிய,
வில்லின் வண்ணத்து ஒளிர் தெண் திரை மேல் மிளிர் மின்னொடு மேய்
செல்லின் வண்ணத்து எவணும் திரண்டு மிதக்கக் காண்பார். |
"இருளின் நிறமுள்ள
உடலை உடைய எசித்து வீரர், அணி போல்
திரண்டும், இடையே பிரியாமலும், கதிரின் தன்மையாய் ஒளிரும் தம்
வாள் நீங்காமலும் இணைந்து திரிந்து, வானவில்லின் வண்ணமாய் ஒளிரும்
தெளிந்த திரையின் மேல் ஒளிவிடும் மின்னலோடு கடலில் மேய்ந்து திரியும்
மேகங்களின் வண்ணமாக எங்கும் திரண்டு மிதந்து கொண்டிருக்கவும்
காண்பர்.
| 70 |
மிகப்பட்
டுயர்வல் லிறையோன் விறலாற் கரைசேர்ந் தவரே
நகப்பட் டொருங்கே நவைபட் டுடன்ற நண்ணார் கடலு
ளகப்பட் டமிழ்ந்தி யலைமேன் மிதக்க வனைத்துங் கண்டே
புகப்பட் டழிக்கும் வினையின் பொலிசை காண்மி னென்பார். |
| |
"மிகப் பட்டு
உயர் வல் இறையோன் விறலால் கரை சேர்ந்தவரே,
நகப் பட்டு ஒருங்கே நவை பட்டு, உடன்ற நண்ணார், கடலுள்
அகப்பட்டு அமிழ்ந்தி அலை மேல் மிதக்க, அனைத்தும் கண்டே,
'புகப் பட்டு அழிக்கும் வினையின் பொலிசை காண்மின்!' என்பார். |
|