"தம்மோடு
மாறுபட்டு வந்த பகைவர், ஒருங்கே இகழ்ச்சிக்கு
ஆளாகியும் துன்பங்களுக்கு உள்ளாகியும் கடலுக்குள் அகப்பட்டு
அமிழ்ந்தி, உயிரிழந்து அலையின்மேல் மிதக்க, மேம்பட்டு உயர்ந்த
வல்லமை கொண்ட ஆண்டவனின் ஆற்றலால் கரைசேர்ந்து நின்ற
இசுரவேலர், இவை அனைத்தையும் கண்டு, 'புகவிடுவதனால்
விட்டவரையே அழிக்கும் தீவினையின் பயனைப் பாருங்கள்!' என்று
தமக்குள் பேசிக் கொள்வர்.
| 71 |
பரியே காவா
வுயிரைப் பருகி யூன்பெய் மருப்பிற்
கரியே காவா வளிமுற் கடிதூ ரிரதங் காவா
வெரிவேல் காவா வெவையுங் காவா விறையோ னருளிற்
புரிவே காவா தனகால் புரையின் விளைவி தென்பார். |
| |
பரியே காவா;
உயிரைப் பருகி ஊன் பெய் மருப்பின்
கரியே காவா; வளி முன் கடிது ஊர் இரதம் காவா;
எரி வேல் காவா; எவையும் காவா, இறையோன் அருளின்
புரிவே காவாதன கால், புரையின் விளைவு இது' என்பார். |
"ஆண்டவன் அருட்
செயல் இடையே வந்து காக்காத போது,
குதிரைகளும் காக்க மாட்டா; பகைவர் உயிரைப் பருகி ஊனைச்
சொரியும் தந்தம் கொண்ட யானைகளும் காக்க மாட்டா; காற்றையும்
முந்திக் கொண்டு விரைந்து செல்லும் தேர்களும் காக்க மாட்டா;
ஒளிரும் வேல்களும் காக்கமாட்டா; வேறு எவையுமே காக்க மாட்டா.
பாவத்தின் விளைவு இது' என்றும் பேசிக் கொள்வர்.
| 72 |
நல்ல திலதே
லமுதே நஞ்சா நஞ்சே யமுதா
மல்ல திலதேல் வினையே யமர்செய் துதைப்ப நிற்பா
ரில்ல திலதேல் வினையே யிகல்செய் தவரைக் கெடுக்க
வல்ல திலதே யென்பார் வரையா தொழுது மகிழ்வார். |
| |
"நல்லது இலதேல்,
அமுதே நஞ்சு ஆம்; நஞ்சே அமுது ஆம்,
அல்லது இலதேல், வினையே அமர் செய்து உதைப்ப, நிற்பார்
இல்; அது இலதேல் வினையே, இகல் செய்து அவரைக் கெடுக்க
வல்லது இலதே' என்பார்; வரையா தொழுது மகிழ்வார். |
|