|
"நல்ல
செயல் தம்மிடம் இல்லையாயின், அமுதமும் அவருக்கு
நஞ்சாய் மாறிப் போகும்; தீய செயல் இல்லையாயின், நஞ்சே அமுதமாய்
அமைந்து விடும். தாம் செய்த தீ வினையே தம்மோடு போர் செய்து
உரைக்குங் காலத்தில், எழுந்து நிற்பார் எவரும் இல்லை; தீ வினை
இல்லையாயின், பகைத்து அவரைக் கெடுக்க வல்லது ஒன்றும் இல்லை'
என்றும் சொல்லுவர்; ஆண்டவனைத் தொழுது அளவில்லாது மகிழ்வர்,
நல்லது அல்லது
- தீயது. 'வினை' இங்குத் தீவினையை மட்டும்
சுட்டியது. மூன்றாம் அடியில், 'அது இலதேல் வினையே' என்பதனை,
'வினை அதுவே இலதேல்' என மாற்றி, 'அது' பகுதிப் பொருள் விடுதி
எனக் கொள்க.
| 73 |
சொல்வாய்
தவிரச் சிறைதீர் சூத ருவந்தப் பறம்போ
யெல்வாய் முகிலு மல்வா யெரித்தூ ணுருவு மிவர்முன்
செல்வா யிவர்சென் றெரிவாய் திளைத்த பாலைத்
திணைவா
யொல்வா யழலு மாற்றா துணுநீ ரின்றி யுளைந்தார். |
| |
"சொல் வாய்
தவிர, சிறை தீர் சூதர், உவந்து அப்புறம் போய்,
எல் வாய் முகிலும் அல் வாய் எரித் தூண் உருவும் இவர் முன்
செல்வு ஆய், இவர் சென்று, எரி வாய் துளைத்த பாலைத்திணை
வாய்
ஒல் வாய், அழலும் ஆற்றாது, உணும் நீர் இன்றி, உளைந்தார். |
"சிறை நீங்கிய
யூதர், சொல்லுக்கு அடங்காத விதமாய் மகிழ்ந்து
அப்பால் போயினர். பகலில் மேகமும் இரவில் நெருப்புத் தூண் உருவமும்
இவர்கள் முன் சென்று கொண்டிருந்தது. அவ்வாறு இவர்கள் சென்று,
இடமெல்லாம் நெருப்புப் போல் வெப்பம் மிகுந்த பாலை நிலத்தை
அடைந்த போது, உண்பதற்கு நீரும் இல்லாமல், அவ்வெப்பத்தையும்
தாங்கமாட்டாமல் வருந்தினர்.
சூதர் 'யூதர்'
என்பதன் மாற்று வடிவம்.
| 74 |
தொடையே
நின்ற தயையு நீதித் தொகையும் பிரியா
மிடையே நின்ற விறையோன் பணிப்ப வேத்தி ரத்தார்
புடையே நின்ற கல்லைப் புடைப்பப் புனல்பாய்ந் தக்கல்
லிடையே நின்று தொடர வினிதெண் ணிலர்சால் புண்டார். |
|