|
"தொடையே, நின்ற
தயையும் நீதித் தொகையும் பிரியா
மிடையே நின்ற இறையோன் பணிப்ப, வேத்திரத்தால்
புடையே நின்ற கல்லைப் புடைப்ப, புனல் பாய்ந்து, அக் கல்
இடையே நின்று தொடர, இனிது எண் இலர் சால்பு உண்டார். |
"மாலை போல்,
நிலை பெற்ற அன்பும் நீதித் திறங்களும் என்றும்
பிரியாமல் செறியக் கொண்டு நின்ற ஆண்டவன் கட்டளையிட, மோயிசன்
பக்கத்தில் நின்ற குன்றைப் பிரம்பினால் அடிக்கவே, அதினின்று நீர்
பாய்ந்து, அக்குன்று இடையே நின்று பின்னும் தம்மைத் தொடர்ந்து வர,
எண்ணற்ற மக்கள் அதன் நீரை இனிதே நிறைவாக உண்டனர்.
குன்றினின்று
நீர் பிறந்தது; ப. ஏ, யாத்திராகமம் 17 : 1.7 காண்க.
குன்று தொடர்ந்து சென்றது : பு. ஏ, 1 கொ. 10 : 4.
| 75 |
அவ்வா றொருசூ
ரலைக்கொண் டவையா வையுஞ்செய்
தெவனோ
விவ்வா றிளவ லென்ன வொளித்தந் நாடே ருகின்றான்
செவ்வா றுளத்தோன் பயந்தத் திசைதே டுவனோ வென்னா
வொவ்வா வெசித்தா ருணர்வா ரெனமீட் டுரைத்தான்
வானோன். |
| |
"அவ்வாறு ஒரு
சூரலைக் கொண்டு அவை யாவையும் செய்து
எவனோ,
இவ்வாறு இளவல் என்ன ஒளித்து அந்நாடு ஏகுகின்றான்.
செவ் ஆறு உளத்தோன், பயந்து அத்திசை நாடுவனோ என்ன,
ஒவ்வா எசித்தார் உணர்வார்" என, மீட்டு உரைத்தான் வானோன்: |
"அவ்வாறு ஒரு
பிரம்பைக் கொண்டு அவையெல்லாம் செய்தவன்
எவனோ அவனே, இவ்வாறு ஒரு சிறுவனாக ஒளித்து அந்நாட்டிற்குச்
செல்கின்றான். செவ்வையான நெறியையே உள்ளத்தில் கொண்ட
ஆண்டவன், அச்சத்தை முன்னிட்டு அத்திசை நோக்கிச் செல்வானோ
என்பதை, முன் இசைந்து நடவாத எசித்து மக்கள் பழைய வரலாற்றால்
நன்கு உணர்வர்" என்று அவ்வானவன் கூறி, மேலும் பின் வருமாறு
தொடர்ந்து கூறினான் :
'செய்து
எவனோ' என்பதனைச் 'செய்தவன் எவனோ அவனே' என்று
விரித்துக் கொள்க.
|