பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்65

                சகோபுக்கு உதவிய பயன்

     -விளம், -விளம், -மா, கூவிளம்

               76
கடலுடை யுலகெலாங் கலங்க வின்னவை
மிடலுடை வலியொடு விளங்கச் செய்தவ
னுடலுடை யிளவலா யொளித்த பான்மையா
லடலுடை யருளுணர் வமைந்து ளானரோ.
 
"கடல் உடை உலகு எலாம் கலங்க இன்னவை
மிடல் உடை வலியொடு விளங்கச் செய்தவன்,
உடல் உடை இளவலாய், ஒளித்த பான்மையால்,
அடல் உடை அருள் உணர்வு அமைந்து உளான்
                                  அரோ.

     "கடலை உடையாகக் கொண்டுள்ள உலகமெல்லாம் அறிந்து
கலங்குமாறு, எந்த வலிமையையும் உடைக்கக் கூடிய வல்லமையோடு
இவற்றை யெல்லாம் விளங்கச் செய்த ஆண்டவனை, இப்பொழுது
உடலெடுத்துப் பிறந்த ஒரு சிறுவனாய், அங்கு ஒளித்துச் சென்ற
பாவனையாக, தன் வல்லமையோடு பொருந்தக் கொண்ட
அருளுணர்வைப் புலப்படுத்த அமைந்துள்ளான்.

     'அரோ' அசைநிலை.

              77
தீயவினை செய்தபோ தெசித்து சீர்கெட
நோய்வினை செய்தன னுனித்தந் நாடர்தாந்
தாய்வினை செய்துமுன் சகோபு காத்தலாற்
போய்வினை யறுத்தருள் பொழிய வுள்ளினான்.
 
"தீய் வினை செய்த போது எசித்து சீர் கெட
நோய் வினை செய்தனன், நுனித்து, அந் நாடர் தாம்
தாய் வினை செய்து முன் சகோபு காத்தலால்,
போய், வினை அறுத்து, அருள் பொழிய உள்ளினான்.

     "தீவினை செய்த போது அவ்வெசித்து நாடு சீரழியுமாறு மேலே
காட்டிய துன்பச் செயல்களைச் செய்த அவனே, நுணுக உணர்ந்து,
அந்நாட்டவர் முன் தாய்க்குரிய செயலைச் செய்து சகோபு என்பவனை
ஆதரித்துக் காத்தமையால், தானே அங்குப் போய், அவர் தம் பாவ
வினையை அறுத்து, அருளைப் பொழிய நினைந்துள்ளான்.