|
| 84 |
"மெல்லிய
வுருக்கொடு மிடலி னோனுணர்
கல்லிய கருணையின் கருத்தி தாமெனச்
சொல்லிய மிக்கயேல் தோன்ற றூயடி
புல்லிய வணக்கொடு பொலியப் போற்றினான். |
| |
"மெல்லிய உருக்
கொடு, மிடலினோன், உணர்
கல்லிய கருணையின் கருத்து இது ஆம்" எனச்
சொல்லிய மிக்கயேல், தோன்றல் தூய் அடி
புல்லிய வணக்கொடு பொலியப் போற்றினான். |
"வல்லமையுள்ள
இவ்வாண்டவன், மெல்லிய குழந்தை வடிவம்
கொண்டிருந்து, ஆழ்ந்த கருணையோடு உணர்ந்த கருத்து இதுவே ஆகும்"
என்று முடித்துச் சொல்லிய மிக்கயேல், திருமகனின் தூய அடியைத்
தலையால் தழுவிய வணக்கத்தோடு பொலியப் போற்றினான். சூசையின்
உணர்வுகள்
| 85 |
பெய்தகான்
மதுமழை பெருக்குற் றோடிய
மொய்தகா வெள்ளமுண் மூழ்கி யின்பெழப்
பொய்தகாச் சுருதிநூற் பூத்த வாகையான்
கொய்தகா யிடர்கெடக் குளித்துள் ளாடினான். |
| |
பெய்த கான்
மது மழை பெருக்குற்று ஓடிய
மொய் தகா வெள்ளம் உள் மூழ்கி, இன்பு எழ,
பொய் தகாச் சுருதி நூல் பூத்த வாகையான்,
கொய்த காய் இடர் கெடக் குளித்து உள் ஆடினான். |
பொய் பொருந்துதல்
இல்லாத வேத நூலை மலராகக் கொண்டு பூத்த
கொடியை உடையவனாகிய சூசை, பெய்த மணமுள்ள மதுவின் மழைப்
பெருக்கெடுத்து ஓடி மொய்த்த தாங்காத வெள்ளத்தினுள் மூழ்கி, இன்பம்
மேலோங்க, கொய்து களைந்த வெம்மையான துயரம் முற்றும் கெடுமாறு
அதனுள் குளித்துத் திளைத்தான்.
|