|
சூசையின்
பாடல்
நாற்சீரடி நான்காய்,
வெண்டளையால், மூன்றாமடி இடை மடக்காய்
அமைந்த பாடல்.
| 88 |
தனைவேண்டிப்
போயொளித்த தன்மைப் பிறர்கொள்
வினைவேண்டித் தானுண் மெலிந்தழுவான் யாரே
வினைவேண்டித் தானுண் மெலிந்தழுதே யிங்கண்
ணெனைவேண்டி மைந்தனென வெய்திய நீயன்றே. |
| |
"தனை வேண்டிப்
போய் ஒளித்த தன்மை, பிறர் கொள்
வினை வேண்டித் தான் உள் மெலிந்து அழுவான் யாரே?
வினை வேண்டித் தான் உள் மெலிந்து அழுதே, இங்கண்
எனை வேண்டி மைந்தன் என எய்திய நீ அன்றே? |
"தனக்குப் பாதுகாப்பு
வேண்டி ஒளித்த தன்மை காட்டிப் போய்,
பிறர் கொண்ட பாவ வினையைப் போக்க வேண்டித் தானே உள்ளம்
மெலிந்து அழுபவன் யாரோ? பாவ வினையைப் போக்க வேண்டி உள்ளம்
மெலிந்து அழுது, இவ்வுலகில் எனக்கு அருள் செய்ய வேண்டி மனிதனாக
வந்தடைந்த நீயே அல்லவா?
'வேண்டி' என்ற
சொல்லின் சார்புப் பொருள் விரித்துரைக்கப்பட்டது.
'எனை' என்றது, 'என் போன்ற மனிதர், என்ற கருத்தில் நின்றது.
| 89 |
புள்வழியே
நீர்மேற் புணைவழியே யாய்ந்தடைந்தா
லுள் வழியே நீத்தடையா வோங்கியல்பான் றான்யாரே
யுள்வழியே நீத்தடையா வோங்கியல்பான் வானரசாய்
முள் வழியே யீங்கிடருண் மூழ்கியழு நீயன்றே. |
| |
"புள் வழியே,
நீர் மேல் புணை வழியே ஆய்ந்து, அடைந்தால்,
உள் வழியே நீத்து, அடையா, ஓங்கு இயல்பான், தான் யாரே?
உள் வழியே நீத்து, அடையா, ஓங்கு இயல்பான், வான் அரசு
ஆய்,
முள் வழியே, ஈங்கு இடருள் மூழ்கி அழும் நீ அன்றே? |
|