|
"பறவை ஆகாயத்தில்
பறந்து சென்ற வழியையும், தெப்பம் நீரின்
மேல் மிதந்து சென்ற வழியையும் ஆராய்ந்து, ஒருவன் அவ்வழியைப்
பின்பற்றிச் சென்றடையக் கூடுமாயினும், உள்ளத்தின் வழியையும் கடந்து,
வேறு எவ்வகையாலும் சென்றடைய இயலாதவாறு, உயர்ந்து நிற்கும்
இயல்புள்ளவன் தான் யாரோ? உள்ளத்தின் வழியையும் கடந்து, வேறு
எவ்வகையாலும் சென்றடையாதவாறு, உயர்ந்து நிற்கும் இயல்புள்ளவன்,
வானுலகிற்கு அரசனாய் இருந்தும், முள் நிறைந்த வழியை ஏற்றுக் கொண்டு,
இம்மண்ணுலகில் துன்பத்துள் மூழ்கிக் கிடந்து அழும் நீயே அல்லவா?
| 90 |
காய்ந்தா
லுலகெரிக்குங் கண்ணான் கருணைமுகந்
தீய்ந்தா லவாவவிக்கு மேந்தருளான் றான்யாரே
ஈய்ந்தா லவாவவிக்கு மேந்தருளா னீயன்றோ
வாய்ந்தா லுனதியல்பீங் காரறிவா ராருயிரே. |
| |
"காய்ந்தால்
உலகு எரிக்கும் கண்ணான், கருணை முகந்து
ஈய்ந்தால் அவா அவிக்கும் ஏந்து அருளான் தான் யாரே?
ஈய்ந்தால் அவா அவிக்கும் ஏந்து அருளான் நீ அன்றோ?
ஆய்ந்தால் உனது இயல்பு ஈங்கு ஆர் அறிவார், ஆர் உயிரே!" |
"சினத்தால் உலகத்தை
எரிக்கக் கூடிய கண்ணை உடையவனாய்,
கருணையை வாரி வழங்க முற்பட்டால் ஆசை அவிய வழங்கும் உயர்ந்த
அருள் கொண்டவன் யாரோ? வழங்க முற்பட்டால் ஆசை அவிய
வழங்கும் உயர்ந்த அருள் கொண்டவன் நீயே அல்லவா? எனக்கு அரிய
உயிரானவனே, எப்படி ஆராய்ந்து பார்த்தாலும் யார் உனது இயல்பை
இம்மண்ணுலகில் அறிந்து கொள்வார்?"
காபிரியல்
தந்த படைப்புச் செய்தி
- - காய்,
- - காய், -மா, தேமா, - - காய்.
| 91 |
பாடினான்
வியந்துளத்திற் பெருகு மின்பப் பரவையின்றா
னாடினா னழுங்கண்ணீ ராட்டித் தேம்பூ வடிதொழுதான்
சூடினான் சுவைவிள்ளான் பினர்முந் நீர்மேற் றுறுவெள்ள
மோடினா லெனத் தொழுங்கா பிரிய லின்புற் றுரையுற்றான். |
|