|
பாடினான் வியந்து;
உளத்தில் பெருகும் இன்பப் பரவையின் தான்
ஆடினான்; அழும் கண்ணீர் ஆட்டித் தேம் பூ அடி தொழுதான்;
சூடினான்; சுவை விள்ளான். பினர், முந்நீர் மேல் துறு வெள்ளம்
ஓடினால் என, தொழும் காபிரியல், இன்புற்று உரை உற்றான். |
இவ்வாறெல்லாம்
சூசை வியந்து பாடினான்; தன் உள்ளத்தில் பெருகும்
இன்பக் கடலில் நீராடினான்; அழும் கண்ணீரால் நீராட்டித் திருமகனின்
தேன் மலர் போன்ற அடியைத் தொழுதான்; அதைத் தன் தலையில்
சூடிக்கொண்டான்; அச்சுவையை எடுத்துக் கூற இயலாதவனானான். பின்னர்,
அவனைப் போலவே திருமகன் திருவடியைத் தொழும் காபிரியல் என்னும்
வானவன், பெருகிய வெள்ளம் கடலின் மீது ஓடினாற் போல இன்புற்று, பின்
வருமாறு சொல்லலானான் :
| 92 |
உடல்வண்ணத்
திளவலென விங்கண் டோன்றி யுதித்தபிரான்
கடல்வண்ணத் தெக்குணமு முளனாய் முன்னாட் கடுநீதி
யடல்வண்ணத் தெசித்தறியு மல்லா லிங்க ணாரறியார்
மிடல்வண்ணத் தெழுங்கதத்தி லிவன்றன் னீதி வெகுண்டனகால். |
| |
"உடல் வண்ணத்து
இளவல் என இங்கண் தோன்றி உதித்த பிரான்,
கடல் வண்ணத்து எக் குணமும் உளனாய், முன் நாள் கடு நீதி
அடல் வண்ணத்து எசித்து அறியும் அல்லால், இங்கண் ஆர் அறியார்,
மிடல் வண்ணத்து எழும் கதத்தில் இவன் தன் நீதி வெகுண்டன கால்? |
"உடலின் தன்மையால்
ஒரு சிறுவன் போல இவ்வுலகில் தோன்றிப்
பிறந்த இவ்வாண்டவன், கடல் போல எல்லா நலமும் தன்னுள்
கொண்டவனாய், முற்காலத்தில் தன் கடுமையான நீதியால் தண்டிக்கும்
தன்மையை எசித்து நாடு அறியும்! அல்லாமலும், தன் வல்லமையின்
அளவிற்கு எழும் சினத்தில் இவன் தன் நீதியை முன்னிட்டு வெகுண்டபோது
|