|
நிகழும் கேட்டை இவ்வுலகில்
யார் அறியார்?
'நிகழும் கேடு'
என்ற கருத்துப் பொருள் விரிக்கப்பட்டது.
| 93 |
செய்ப்பட்ட
வானுலகும் வான்மீன் றிங்கள் செஞ்சுடரு
மொய்ப்பட்ட நீருலகு நீரிற் றுப்பு முத்தணியு
மைப்பட்ட பூவுலகும் புனலும் வெற்பு மைந்திணையுங்
கைப்பட்ட வெவ்வுலகுஞ் செய்தா னிந்நற் காதலனே. |
| |
"செய்ப் பட்ட
வான் உலகும், வான்மீன் திங்கள் செஞ்சுடரும்,
மொய்ப் பட்ட நீர் உலகும், நீரில் துப்பும் முத்து அணியும்,
ஐப்பட்ட பூ உலகும், புனலும் வெற்பும் ஐந்திணையும்,
கைப் பட்ட எவ் உலகும் செய்தான், இந் நல் காதலனே. |
இந்த நல்ல
அன்புக்குரிய மகனே, செம்மை படர்ந்த
வானுலகத்தையும், அங்கு விண்மீன் திங்கள் ஞாயிற்றையும், அலைகள்
மொய்த்துத் திரண்ட நீருலகமாகிய கடலையும், அக் கடல் நீரில் பவளம்
முத்துப் போன்ற அணிகளையும், அழகு பொருந்திய பூவுலகத்தையும்,
அதனில் ஆறு மலை ஐவகை நிலங்களையும், செயலுக்கு உட்பட்ட வேறு
எவ்வுலகங்களையும் படைத்தவன் ஆவான்.
உலகப் படைப்புச்
செய்தி: ப. ஏ., ஆதியாகமம், அதிகாரங்கள் 1-2
காண்க.
| 94 |
சீராரு மணியினமும்
பைம்பூ முப்பா றிளையினமும்
பாராருங் கூழினமுங் கனியுந் தீந்தேன் பல்லினமு
மேராரு நிறத்தினமு மின்புய்த் தாரு மிசையினமு
நீராரும் பூவுலகின் செல்வங் கூறு நிலையிலதே. |
| |
"சீர் ஆரும்
மணி இனமும், பைம் பூ முப்பால் திளை இனமும்,
பார் ஆரும் கூழ் இனமும், கனியும் தீம் தேன் பல் இனமும்,
ஏர் ஆரும் நிறத்து இனமும், இன்பு உய்த்து ஆரும் இசை
இனமும்,
நீர் ஆரும் பூ உலகின் செல்வம் கூறும் நிலை இலதே. |
|