|
"மட்டு அற்ற
புல் உயிர்கட்கு அரசன் ஆக, வானவர் போல்
கட்டு அற்ற வேண்டுதல் வேண்டாமை வல்ல கருத்து உயிரை
நட்டு, அற்றம்நிகர் கடந்த உருவின் மாமை ஞாயில் பொறித்து
இட்டு, அற்றம் இன்றி மனுக் குலத்தை ஈன்றான், இத் திறத்தான். |
"இத்தகைய திறம்
படைத்த இவ்வாண்டவன், அளவற்ற அற்ப
உயிர்களுக்கெல்லாம் அரசனாக, வானவர் போல் கட்டற்றதும் வேண்டுதல்
வேண்டாமை என்ற உரிமையில் வல்லதுமான ஆன்மா என்ற கருத்து
உயிரை உள்ளே நட்டு, எல்லையும் ஒப்பும் கடந்த உடல் உருவமாகிய
அழகான மதிலை அமைத்துத் தந்து, மனித இனத்தைக் குறையின்றிப்
படைத்தான்.
ஆன்மா இல்லாத
பிற உயிர்களெல்லாம் 'புல்லுயிர்' எனப்பட்டன.
ஆன்மா கொண்ட மனித உயிர் 'கருத்து உயிர்' எனப்பட்டது.
| 97 |
இற்றெல்லாங்
கலைமுகந்த கற்றோ ரெஞ்ச வீட்டியபின்
னற்றெல்லா முணர்கில்லா மக்க ளின்னா வருந்துமவா
வுற்றெல்லா மழுக்குற்ற தென்று நாத னுடன்றனகான்
முற்றெல்லா மழிப்பமுனி வுணர்ந்த தன்மை மொழிகிற்பேன். |
| |
"இற்று எல்லாம்,
கலை முகந்த கற்றோர் எஞ்ச, ஈட்டிய பின்,
அற்று எல்லாம் உணர்கு இல்லா மக்கள், இன்னா அருந்தும் அவா
உற்று, எல்லாம் அழுக்கு உற்றது என்று நாதன் உடன்றன கால்,
முற்று எல்லாம் அழிப்ப முனிவு உணர்நத தன்மை மொழிகிற்பேன். |
"கலைகளை வாரிக்
கொண்ட கற்றவர் உணர்வுக்கும் எட்டாதவாறு,
இவையெல்லாம் படைத்துத் தொகுத்த பின், அவையெல்லாம் உணர்ந்து
கொள்ளாத மக்கள் துன்பம் அருந்துவதற்குக் காரணமான ஆசைக்கு
|