|
அடிமையாகி,
அதன் மூலம் மனித இனம் எல்லாம் பாவ அழுக்குக்கு
ஆளாகியதென்று கண்டு ஆண்டவன் சினந்த காலத்தில், எல்லாமே
முற்றும் அழிக்கவென்று சினம் கொண்ட தன்மையை இனித் தொடர்ந்து
கூறுவேன்.
இது, அது எனப்
பொருள்படும் இற்று, அற்று என்ற ஒருமைச்
சொற்கள் இங்குப் பன்மை சுட்டி நின்றன.
உலகை
அழித்த நிகழ்ச்சி
- விளம், -
விளம், - மா, கூவிளம்
| 98 |
மாயிரத்
தவிர்புவி வகுத்து மாயன
மாயிரத் தாறுநூற் றைம்பத் தாறுமாய்த்
தீயகத் தார்ந்தன செயிர்பொ றாமையாற்
காயகத் தாண்டகை கதத்தை யுள்ளினான். |
| |
"மாயிரத்து அவிர்
புவி வகுத்தும் ஆயனம்
ஆயிரத்து ஆறு நூற்று ஐம்பத்து ஆறும் ஆய்,
தீ அகத்து ஆர்ந்தன செயிர் பொறாமையால்,
காய் அகத்து ஆண்டகை கதத்தை உள்ளினான். |
"கதிரவனின் கதிரால்
விளக்கப்படும் இவ்வுலகத்தைப் படைத்து,
ஆண்டுகள் ஆயிரத்தறுநூற் றைம்பத்தாறு நடக்கையில், மக்களின் தீய
உள்ளத்தில் நிறைந்து கிடந்த பாவங்களைப் பொறுக்கமாட்டாமல்,
ஆண்டவன் வெறுத்த தன் உள்ளத்தில் சினச் செயலைக் காட்டக்
கருதினான்.
ஆர்ந்தன -
ஆர்ந்த; இடையே 'அன்' சாரியை.
| 99 |
மறைநெறி
நீங்கிய மனித ருட்கெட
நிறைநெறி நீங்கிய காம நீர்குளித்
திறைநெறி நீங்கிய வின்ன பாருடைக்
கறைநெறி நீங்குப கழுவ லுள்ளினான். |
| |
"மறை நெறி நீங்கிய
மனிதர், உள் கெட,
நிறை நெறி நீங்கிய காம நீர் குளித்து,
இறை நெறி நீங்கிய இன்ன பார் உடைக்
கறை நெறி நீங்கிய கழுவல் உள்ளினான். |
|