|
"வேத நெறியை
விட்டு விலகிய மனிதர், தம் உள்ளம் கெட்டு, கற்பு
நெறிக்கு விலக்காகிய காமம் என்னும் நீரில் மூழ்கி, கடவுள் வழிபாட்டு
நெறி நின்றும் நீங்கிய இந்த உலகம் கொண்டுள்ள பாவ நெறி நீங்குமாறு
அதனைக் கழுவநினைந்தான்.
வெள்ளத்தால்
உலகை அழிக்க நினைந்ததைக் கழுவ நினைந்ததாகப்
புனைந்து கூறினார். வெள்ளத்தால் உலகம் அழிந்தது : ப. ஏ., ஆதியாகமம்,
அதிகாரங்கள் 6 - 8 காண்க.
| 100 |
உள்ளிய வாய்ச்செய
வுளத்தி னேவலா
லெள்ளிய வுலகெலா மெஞ்சக் கார்முகில்
விள்ளிய கண்பக மின்னி யார்த்திடித்
தள்ளிய விருள்புவி யனைத்து மொய்த்ததே. |
| |
"உள்ளிய வாய்ச்செய
உளத்தின் ஏவலால்,
எள்ளிய உலகு எலாம் எஞ்ச, கார் முகில்,
விள்ளிய கண் பக, மின்னி ஆர்த்து இடித்து,
அள்ளிய இருள் புவி அனைத்தும் மொய்த்ததே. |
"தான் நினைந்தவற்றை
வாய்க்கச் செய்யுமாறு ஆண்டவன் தன் உள்ளத்தால் ஏவியமையால், தன்னை இகழ்ந்த உலகம்
முழுவதும் மெலியுமாறு, திறந்து நோக்கிய கண்ணைப் பிளந்த தன்மையாய்க்
கருமேகம் மின்னி முழங்கி இடிக்கவே, செறிந்த இருள் உலகம்
முழுவதையும் மூடி மறைத்தது.
| 101 |
வரையுழி
வரைவிலா வடிந்த வாறெனப்
புரையுழி முகில்கணீர் பொழிய நாழிகை
யரையொழி யாமுன ரகன்றி யாண்டையுந்
தரையுழி யாற்றொடு தடங்க ளார்ந்தன. |
| |
"வரை உழி வரைவு
இலா வடிந்த ஆறு என,
புரை உழி முகில்கள் நீர் பொழிய, நாழிகை
அரை ஒழியா முனர் அகன்று, யாண்டையும்
தரை உழி ஆற்றொடு தடங்கள் ஆர்ந்தன. |
"மலையினின்று
அளவில்லாமல் வடிந்து பாய்ந்த ஆறு போல, துளையிட்டது போன்று மேகங்கள் நீரைப் பொழியவே,
அரை நாழிகை செல்வதற்குள் அந்நீர் பரந்து நிலத்தில் எங்கும் ஆறுகளோடு குளங்களும்
நிரம்பி வழிந்தன.
|