பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்79

              102
ஆறொடு மாறொடு மரித நான்கினு
மாறொடு மாறுமொய்த் ததிர்ந்தெ முந்திரை
பாறொடு பாறெனப் பொருது பாரெலாம்
பாறொடு பாறுநீர் படர்ந்து மொய்த்ததே.
 
"ஆறொடும் ஆறொடும் அரிதம் நான்கினும்,
ஆறொடும் ஆறு மொய்த்து, அதிர்ந்து எழும்
                               திரை
பாறொடு பாறு எனப் பொருது, பார் எலாம்
பாறொடு பாறு நீர் படர்ந்து மொய்த்ததே.

     "ஆறோடு ஆறும் நான்குமாய்க் கிடந்த பதினாறு திசைகளிலும்,
ஆறுகளோடு ஆறுகள் ஒன்றாய்க் கலந்து, அதனால் அதிர்ந்து எழும்
திரைகள் கப்பலோடு கப்பல் மோதுவது போல் மோதி, பருந்தின்
வேகத்தோடு ஓடிய நீர் பூமியெங்கும் படர்ந்து மூடியது.

                103
கரை கொலுங் கடலெழீஇக் கழறி வாங்கிய
வரைகொலு முயர்திரை மங்குற் பாய்ந்தெழப்
புரைகொலு முழக்கெழீஇப் புவனமெங்கணு
முரைகொலு நடுக்குறீஇ யுலம்பிற் றாயதே.
 
"கரை கொலும் கடல் எழீஇக் கழறி, வாங்கிய
வரை கொலும் உயர் திரை மங்குல் பாய்ந்து எழ,
புரை கொலும் முழக்கு எழீஇ, புவனம் எங்கணும்
உரை கொலும் நடுக்கு உறீஇ உலம்பிற்று ஆயதே.

     "கரையோடு மோதும் கடல் பொங்கி முழங்கி, அதனால் உயர்ந்த
மலையையும் வீழ்த்தக் கூடிய திரைகள் மேகத்தில் பாய்ந்து மேலோங்க,
அதனால் ஒப்புமை இல்லாத முழக்கம் எழுந்தமையால், உலகம் முழுவதும்
சொல்லுக்கு அடங்காத நடுக்கங் கொண்டு முழங்கலாயிற்று.

             104
நீரெழு மோதையு நீர்பெய் யோதையுங்
காரெழு மோதையுங் கால்செய் யோனதயுஞ்
சூரெழு மோதையும் துதைந்து வீழ்மனை
பேரெழு மோதையும் பெருகி மாறுமால்.