பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்80

"நீர் எழும் ஓதையும், நீர் பெய் ஓதையும்,
கார் எழும் ஓதையும், கால் செய் ஓதையும்,
சூர் எழும் ஓதையும், துதைந்து வீழ் மனை
பேர் எழும் ஓதையும் பெருகி மாறும் ஆல்.

     "கீழே நீர் பாய்வதனால் எழும் ஓசையும், மேலே மழை நீர்
பெய்யும் ஓசையும், மேகத்தினின்று எழும் ஓசையும், காற்று வீசும் ஓசையும்,
மக்களிடம் அச்சத்தால் எழும் ஓசையும், நெருக்கமாக இடிந்து விழும்
வீடுகளால் பெரிதாக எழும் ஓசையும் பெருகி மயங்கும்.

     'ஆல்' அசை நிலை.

                105
புதைத்திருட் கிளர்த்தலும் புயற்ப னித்தலுந்
துதைத்தடுத் திடித்தலுங் கடற்சு ளித்தலுஞ்
சிதைத்தலைப் பெருக்கமுந் திளைப்பக் கண்டனர்
பதைத்திரைத் துகப்பிடைப் பனிப்புற் றோடுவார்.
 
"புதைத்து இருள் கிளர்த்தலும், புயல் பனித்தலும்,
துதைத்து அடுத்து இடித்தலும், கடல் சுளித்தலும்,
சிதைத்த அலைப் பெருக்கமும் திளைப்பக் கண்டனர்,
பதைத்து இரைத்து, உகப்பு இடைப் பனிப்பு உற்று ஓடுவார்.

     "இருள் மூடிப் பெருகுதலும், மேகம் மழை துளித்தலும், இடி
செறிந்து அடுத்து வந்து இடித்தலும், கடல் சினந்து பொங்குதலும்,
கரையைச் சிதைத்தெழுந்த அலையின் பெருக்கமும் மிகுதலைக் கண்ட
மக்கள், பதைத்தும் முழங்கியும் வியப்பினிடையே நடுக்கமுற்றும் ஓடுவர்.

     சிதைத்த+அலை - 'சிதைத்தவலை' என்பது, 'சிதைத்தலை' எனத்
தொகுத்தல் விகாரம்.

               106
மாடநீண் முகட்டுயர் மரத்தின் கொம்புயர்
கூடநீண் பொருப்புயர் குழாங்கொண் டெய்தினர்
தேடநீ ணாளுளைந் தடுத்த சீரெலா
மோடநீ ணீத்தமோ டொழியக் காண்பரே.