"மாட நீள் முகட்டு
உயர், மரத்தின் கொம்பு உயர்,
கூட நீண் பொருப்பு உயர் குழாம் கொண்டு எய்தினர்,
தேட நீள் நாள் உளைந்து அடுத்த சீர் எலாம்
ஓட நீள் நீத்தமோடு ஒழியக் காண்பரே. |
"மாளிகைகளின்
நெடிய உச்சி மீதும், மரக் கொம்புகளின்
உச்சியிலும், கூடுவதற்கு வசதியாக நீண்டு கிடந்த மலைகளின் மீதும் தம்
உயிரைக் காக்கக் கூட்டமாய்ச் சென்றடைந்த மக்கள், தாம் தேடுவதற்கு
நெடுநாள் வருந்தியுழைத்ததனால் வந்தடைந்த செல்வமெல்லாம், ஓடிப்
பெருகும் வெள்ளத்தோடு ஒழிந்து போகக் காண்பர்.
107 |
கவிகையுங்
கொடிகளுங் கதிர்செய் மஞ்சமுஞ்
சிவிகையுந் தளிமமுந் திவழ்ந்த கோசிகக்
குவிகையுங் குஞ்சமுங் கோல வட்டமும்
புவிகையுண் பெருக்கொடு போகக் காண்பரே. |
|
"கவிகையும்,
கொடிகளும், கதிர் செய் மஞ்சமும்,
சிவிகையும், தளிமமும், திவழ்ந்த கோசிகக்
குவிகையும், குஞ்சமும், கோல வட்டமும்,
புவி கை உண் பெருக் கொடு போகக் காண்பரே. |
"குடைகளும்,
கொடிகளும், ஒளி வீசும் கட்டில்களும் பல்லக்குகளும்,
மெத்தைகளும், அழகு விளங்கிய பட்டாடைக் கட்டுகளும், குஞ்சங்களும்,
அழகிய ஆலவட்ட விசிறிகளும், பூமியைக் கையால் எடுத்து உண்பது
போல் தோன்றிய வெள்ளப் பெருக்கோடு போகக் காண்பர்.
108 |
ஏர்முகப்
புதிமணத் திணைந்த காந்தனு
மோர்முகத் தன்னையு முலந்த தாதையுஞ்
சீர்முகத் துணைவரு மினிய சேயரு
நீர்முகத் தமிழ்ந்திமேல் ஞெமுங்கக் காண்பரே. |
|
"ஏர் முகப் புதி
மணத்து இணைந்த காந்தனும்,
ஓர் முகத்து அன்னையும், உலந்த தாதையும்,
சீர் முகத் துணைவரும், இனிய சேயரும்,
நீர் முகத்து அமிழ்ந்தி, மேல் ஞெமுங்கக் காண்பரே. |
|