"பெரிய படையணி
போல் தமக்குப் பாதுகாப்பாகப் பெற்ற
நற்செயல்களைக் கொண்டிராதவர்கட்கு, தன் வல்லமையைப் போல்
அழகிய அணிகலனாக நீதியைக் கொண்டுள்ள ஆண்டவன் சினந்த
காலத்தில், கடல் அகழி போன்ற நீர் நிலைகளும் பாதுகாப்பு
ஆகமாட்டா; நெடிய மதில்களும் பாதுகாப்பு ஆகா; சிறந்த
படையணிகளும் பாதுகாப்பு ஆகா; வானளாவ நின்ற மலைகளும்
பாதுகாப்பு ஆகா.
மதிள் - மதில்
என்பதன் கடைப் போலி.
111 |
எல்லிரா
பனிப்ப மாரி யெழுந்திராக் கதிரிற் பாய்ந்த
வில்லிரா புரிசை யோங்கு மெயிலிரா புணர்ந்த நாவாய்
வல்லிரா கவிழ்ந்து மூழ்கா வரையிரா பெருக்குண் மூழ்கா
கொல்லிரா வுயிரு மில்லா குழைந்துல கழிந்த தன்றே. |
|
"எல் இரா பனிப்ப
மாரி, எழுந்து இராக் கதிரில் பாய்ந்த
இல் இரா, புரிசை ஓங்கும் எயில் இரா, புணர்ந்த நாவாய்
வல் இரா கவிழ்ந்து மூழ்கா, வரை இரா பெருக்குள் மூழ்கா,
கொல் இரா உயிரும் இல்லா குழைந்து உலகு அழிந்தது அன்றே. |
"பகலிரவாக
விடாமல் மழை பெய்ததனால், நிமிர்ந்து மதி மீது
பாய்ந்த இல்லங்கள் நிலை கொள்ளாமலும், மதில்கள் உயர்ந்து சூழும்
ஊர்கள் நிலை கொள்ளாமலும், பாதுகாப்பென்று பொருந்தியிருந்த
கப்பல்கள் கவிழ்ந்து மூழ்காதபடி வலிமை கொண்டிராமலும்,
வெள்ளப்பெருக்கினுள் மூழ்காதபடி உயர்ந்த மலைகள் இல்லாமலும்,
கொல்லுதலுக்கு உட்படாத உயிர்கள் இல்லாமலுமாகக் குழைந்து உலகம்
அழிந்தது.
'அன்றே' அசைநிலை.
'இராக் கதிர்' என்றது, இரவில் தோன்றும்
ஒளி என்ற காரணம் கருதி, மதியைக் குறிப்பதாயிற்று.
112 |
ஆதியைப் பழித்த காமத் தசனிபட் டெரிகின் றாரு
நீதியைப் பழிப்ப வெள்ளி நீந்திநைந் தமிழ்ந்து வாரு
மோதியைப் பழித்த பாவத் துணிவில சோர்சின் றாருஞ்
சேதியைப் பழித்த மாடஞ் சிதைந்துவீழ்ந் தழுங்கின்றாரும். |
|