"அச்சம்
மிகுந்த காரணத்தால் பகை தோன்றாமல், பசு வேங்கைப்
புலியின் மேலும், ஆடு மிக நெருக்கமாகச் சிங்கத்தின் மேலும், கலைமான்
யாளியின் மேலும் ஏறிக்கொண்டு, வெள்ளம் மேலும் பெருகக் கண்டு
விரைந்து நீந்தி, அதனால் தளர்ந்து சோர்ந்து, அங்குள்ள விலங்குகள்
யாவும் ஒன்றாக ஆழம் மிக்க அந்நீர்ப் பெருக்கினுள் மாண்டு, மீன்
கூட்டத்திற்கு விருந்தாய் அமையும்.
வரிப் புலி-புள்ளிப்
புலியின் வேறாகிய வரிப் புலி; வேங்கைப் புலி.
கலைமான் - ஆண் மான். யாளி - யானை முகமும் துதிக்கையிற் பற்களும்
சிங்க உடலும் கொண்டுள்ள ஒரு கற்பனை விலங்கு, 'கயற்கு இனம்'
என்பதனை உருபு பிரித்து, 'கயல் இனத்திற்கு' எனக் கூட்டுக.
116 |
மயில்கிளி
புறவு பூவை மடவனங் குறும்புள் நாரை
குயில்கொடி சிரவங் கூகை கொக்கின முதற்புள் யாவும்
பயில்துளி் விடாமை யானும் பருகவொன் றிலாமை யானுந்
துயில்சிறி திலாமை யானுந் தொறுந்தொறுந் துஞ்சிற் றன்றே. |
|
"மயில் கிளி
புறவு பூவை மட அனம் குறும்புள் நாரை
குயில் கொடி சிரவம் கூகை கொக்கு இனம் முதல் புள் யாவும்,
பயில் துளி விடாமையானும், பருக ஒன்று இலாமையானும்,
துயில் சிறிது இலாமையானும் தொறும் தொறும் துஞ்சிற்று அன்றே. |
"மயிலும், கிளியும்,
புறாவும், மைனாவும், இளமை வாய்ந்த அன்னமும்,
காடையும், நாரையும், குயிலும், காகமும், கௌதாரியும், கூகையும், கொக்கு
இனங்கள் முதலிய பறவைகள் யாவும், நிலைத்த மழை விடாமையாலும்,
உண்ண ஒன்றும் இல்லாமையாலும், தூக்கம் சிறிதும் இல்லாமையாலும்
இடந் தோறும் இடந் தோறும் மடிந்தன.
'அனறே' அசை
நிலை. 'யாவும்' என்ற எழுவாய்க்கு, 'துஞ்சிற்று'
என்ற ஒருமைப் பயனிலையைத் 'துஞ்சின' எனப் பன்மையாகக் கொள்க.
புறவு - புறா; நிலவு - நிலா என்பது போல.
|