117 |
வாயுமுன் றூமம்
போலு மாலிமுன் கங்குற் போலுந்
தீயுமுன் பூளை போலுந் திடனின்முன் பொய்யும் போலும்
வீயுமுன் னுழைகள் போலும் விமலனுண் முனிந்த நீதி
நோயுமுன் னெதிர்த்துத் தாங்க நுனித்தபீ டுடையார் யாரே. |
|
"வாயு முன் தூமம்
போலும், மாலி முன் கங்குல் போலும்,
தீயு முன் பூளை போலும், திடனின் முன் பொய்யும் போலும்,
வீயு முன் உழைகள் போலும், விமலன் உள் முனித்த நீதி
நோயு முன் எதிர்த்துத் தாங்க நுனித்த பீடு உடையார் யாரே? |
"காற்றின்
முன் புகை போலும், பகலவன் முன் இருள் போலும்,
நெருப்பின் முன் பஞ்சு போலும், மெய்யின் முன் பொய் போலும்,
வேங்கையின் முன் மான்கள் போலும், ஆண்டவன் தன் உள்ளம்
சினந்து நீதியின்படி தந்த துன்பத்தின் முன் எதிர்த்து நின்று தாங்கத்
தக்க நுணுகிய வலிமை உடையவர் எவரும் உண்டோ?
தீ,
வீ நோய் என்பன, எதுகைப் பொருட்டு, தீயு, வீயு, நோயு என
நின்றன.
தப்பிய
நோவன் குடும்பம்
118 |
நூல்வருஞ்
சுருதி வேலி நொறில்தவம் விளைத்த சீலஞ்
சால்வரு மாட்சி நோவன் றானுந்தான் றவத்தி னீன்ற
வால்வரும் சேமுங் காமும் யாப்பனு மக்களாக
நால்வரு நால்வர் காந்தை நான்குமன் றிறந்தி லாரே. |
|
"நூல் வரும் சுருதி
வேலி நொறில்தவம் விளைத்த சீலம்
சால் வரும் மாட்சி நோவன் தானும், தான் தவத்தின் ஈன்ற
வால் வரும் சேமும் காமும் யாப்பனும் மக்கள் ஆக
நால்வரும், நால்வர் காந்தை நான்கும் அன்றும் இறந்திலாரே. |
|