பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்89

     "அழகு மிகுந்த ஆருமேனியா என்னும் நாட்டில், அங்கு நீலமணிப்
போல் நிமிர்ந்து நின்ற குன்றின் உச்சியில் அம்மரக்கலம் வந்து தங்கியது.
எல்லோரும் அதினின்று இறங்கியபோது, ஆண்டவன் நோவனை நோக்கி,
'துன்பத்தை வளர்த்த இந்தத் தன்மைபோல இனிமேல் மழை பெய்து
அழிக்காதென்பதற்கு ஆணையாக, இனி மழை பெய்யும்போது, அணிகலன்
போல் தோன்றும் வானவில்லைப் பரப்புவேன்' என்றான்.


                    121
சோதியின் வடிவாய் ஞானந் தொடர்குணத் தெஞ்சான் கோப
வீதியின் வடிவாய் நீத்தம் விட்டுல கஞ்சி யெஞ்ச
நீதியின் வடிவாய் நின்ற நிமலனே கருணை பூத்த
சாதியின் வடிவா யிங்கண் டனயனா மிவன்றா னென்றான்.
 
"சோதியின் வடிவாய், ஞானம் தொடர் குணத்து எஞ்சான், கோப
வீதியின் வடிவாய் நீத்தம் விட்டு, உலகு அஞ்சி எஞ்ச
நீதியின் வடிவாய் நின்ற நிமலனே, கருணை பூத்த
சாதியின் வடிவாய் இங்கண் தனயன் ஆம் இவன்தான்" என்றான்.

     "ஒளியின் வடிவமாகவும், ஞானம் முதலாகத் தொடர்ந்து குணங்களில்
குறைபடாதவனும், கோப வழியின் வடிவமாய் வெள்ளத்தை ஏவிவிட்டு
உலகம் அஞ்சி மெலியுமாறு அன்று நீதியின் வடிவமாய் நின்றவனுமாகிய
ஆண்டவன் யாரோவென்றால், கருணையை மலராகப் பூத்த சண்பக
மரத்தின் வடிவமாக இங்கு மகனாய் அமைந்துள்ள இவனேதான்" என்று
கபிரியேல் முடித்துக் கூறினான்.

                   122
பொற்கலத் தேந்தித் தந்த பொழியமு தனைய
                              வானோன்
சொற்கலத் தேந்திக் காதை துற்றிய விருவ ருள்ளந்
தற்கலத் தேந்து மின்பஞ் சால்பினா லன்னை தன்கை
யெற்கலத் தேந்து தேவ விளவலைப் பாடினாளே.
 
பொன் கலத்து ஏந்தித் தந்த பொழி அமுது அனைய,
                               வானோன்
சொல் கலத்து ஏந்து இக் காதை துற்றிய இருவர், உள்ளம்
தன் கலத்து ஏந்தும் இன்பம் சால்பினால், அன்னை தன் கை
எல் கலத்து ஏந்து தேவ இளவலைப் பாடினாளே.