|
''சிறுவனாய்
வந்த ஆண்டவன் பொழிந்த நலங்களையெல்லாம்
தாங்கிக் கொள்ளாது விட்ட தன்மை இந்தநாடு செய்த பாவத்தின் பயனோ?
தம்மை அரிந்து கொண்டிருந்த துன்பமெல்லாம் கெடுமாறு ஏற்றுக் கொண்ட
தன்மை எசித்து நாட்டார் செய்த புண்ணியத்தின் பயனோ? விரிந்து கிடந்த
நீண்ட வழிப் போக்கு விளைவித்த துன்பங்களைத் தாங்கிக் கொண்டு
தளர்ந்து இவ் விடத்தை விட்டுப் பிரிந்த ஆண்டவன் வருந்துவானே!'' என்று
அவள் அழுதாள்.
| 57 |
உவணி
யாலுயி ருளையவீர்த் துடலென வுளைந்தே
சிவணி வானவன் றிருவுள மிதுவெனத் தேற்றிக்
கவணி யாலலை கருத்தமைந் தையனை யிழத்த
வவணி யார்தன தருமக வொளிப்பது முணர்ந்தாள். |
| |
உவணியால் உயிர்
உளைய ஈர்த்த உடல் என உளைந்தே,
சிவணி வானவன், ''திரு உளம் இது'' என, தேற்றிக்
கவணியால் அலை கருத்து அமைந்து, ஐயனை இழந்த
அவணி ஆர் தனது அரு மகவு ஒளிப்பதும் உணர்ந்தாள். |
உயிர்
வருந்துமாறு வாளால் அரிந்த உடல் போல அவள் வருந்தினாள். வானவன் அவளை அணுகி, ''இது
இறைவன் திருவுளம்''
என்றான். என்னலும், அவள் துன்பத்தால் அலைந்த கருத்தை மாற்றி இறைவன் திருவுளத்திற்கு
அமைந்து தன்னைத் தேற்றிக்கொண்டாள்,
தந்தையை இழந்த நன்மை நிறைந்த தனது அருமை மகனை ஒளித்து வைத்தலைப் பற்றிக் கருதினாள்.
எனவே,
இவ்விடை வெளியில் சக்கரீயன் இறந்தமை புலப்படுகிறது.
| 58 |
சூர்மு கத்துரித்
துணையிலா ணிகர்ப்பருந் துணிவாற்
கார்மு கத்துமின் கடுகலோ டழிபொரு ளளித்துச்
சீர்மு கத்ததன் சேயெடுத் தருந்தவ முள்ளி
நீர்மு கத்தநா டகன்றுகா னொளிப்பதே நினைந்தாள். |
| |
|
சூர் முகத்து
உரித் துணை இலாள் நிகர்ப்பு அருந்துணிவால்
கார் முகத்து மின் கடுகலோடு அழி பொருள் அளித்து,
சீர் முகத்த தன் சேய் எடுத்து, அருந் தவம் உள்ளி,
நீர் முகத்த நாடு அகன்று, கான் ஒளிப்பதே நினைத்தாள்.
|
|