|
எலிசபெத்தை
தன்னை வந்தடைந்த வானவன் சொல்லியவற்றைக்
கேட்டாள். உள்ளத்தைக் குடைந்த நோயோடு கொடிய நெருப்பும் பற்றிக்
கொண்டது போல் தன்மீது வந்து குவிந்த துன்பம் பொறுக்க இயலாது
தவித்தாள். உயிர் கெட்டு நீங்கிய போது நின்ற உடல் தானே விழுவது
போன்று தரையில் விழுந்தாள்.
'குடைந்த
நோய்' தன் மகனுக்கு நேரவிருக்கும் துன்பம் பற்றியும்,
'கொடுந் தழல் குடித்தது' மரியாள் மகனுக்கு நேரவிருந்த துன்பம் பற்றியும்
என்று கொள்க.
| 55 |
எம்மை யீங்களித்
திருவிசும் புயர்ந்தவா னயங்க
டம்மை நீரொடு தான்றார விளவலாய்ப் பிறந்த
செம்மை யோன்றனைச் செகுத்திடப் பகைப்பரோ வென்ன
வெம்மை பாயழல் விழுங்கின விருப்பினா ளுளைந்தான். |
| |
''எம்மை ஈங்கு
அளித்து, இரு விசும்பு உயர்ந்த வான் நயங்கள்
தம்மை நீரொடு தான் தர இளவலாய்ப் பிறந்த
செம்மையோன்தனைச் செகுத்திடப் பகைப்பரோ!'' என்ன,
வெம்மை பாய் அழல் விழுங்கின விரும்பினாள் உளைந்தாள். |
''நம்மையெல்லாம்
பாவத்தினின்று மீட்டுக் காத்து, பெரிய
ஆகாயத்திற்கு அப்பால் உயர்ந்து கிடந்த வானுலக நன்மைகளையெல்லாம்
நமக்கு இனிதாய்த் தரவென்று இம்மண்ணுலகில் ஒரு சிறுவனாய்ப்
பிறந்துள்ள செம்மை வாய்ந்த ஒருவனைக் கொல்ல வென்று பகைப்பவரும் உண்டோ!'' என்று
வியந்து, வெப்பம் பரப்பும் நெருப்பை விழுங்கின
தன்மையாய் அன்புள்ள எலிசபெத்தை வருந்தினாள்.
| 56 |
சொரிந்த
சீர்பொறாத் தன்மையிந் நாடுசெய் துகளோ
வரிந்த நோய்கெட வெசித்தின ராற்றிய வறனோ
விரிந்த நீணெறி விளைத்தநோய் கொடுதளர்ந் திங்கட்
பிரிந்த நாயகன் பெரிதுளை வானென வழுதாள். |
| |
''சொரிந்த
சீர் பொறாத் தன்மை இந்நாடு செய்துகளோ?
அரிந்த நோய் கெட எசித்தினர் ஆற்றிய அறனோ?
விரீந்த நீள் நெறி விளைத்த நோய் கொடு தளர்ந்து இங்கண்
பிரிந்த நாயகன் பெரிது உளைவான்!'' என அழுதாள். |
|