வெருவின் மிக்கோர்
ஒலித்தது எலாம் விண் ஏறு என்பார்
அன்ன, மறை
உருவின் மிக்கோன் எய்திய அன்பு உரிமைக்கு அஞ்சி
மறுத்தமையால்,
செருவின் மிக்கோன் உணர்ந்த பகை செப்பிச் சிறுவன் ஒளிக்குபவான்
திருவின் மிக்க ஓர் வானவனைச் செலுத்துகின்றார் அருள் மிக்கார். |
அச்சம்
மிக்கவர் ஒலித்ததெல்லாம் இடி என்று கருதுவர். அது
போல, வேத வடிவினனாய் மிக்க நலம் படைத்த சூசையும் குழந்தை நாதன்
மீது கொண்டுள்ள அன்புரிமையால் தீங்கு நேருமென அஞ்சி, அவள்
சொன்னதற்கு மனம் இசையாமல் மறுத்தான். அதனால், அருள் மிக்க
சூசையும் மரியாளும் தம்முட் கலந்து பேசி, போரில் வல்லவனாகிய எரோது
தன் மனத்து எண்ணிய பகையை எலிசபெத்தைக்குச் சொல்லி, சிறுவன்
கருணையனை ஒளித்து வைப்பதற்கென்று, வானுலகச் செல்வங்கள் மிக்க
ஒரு வானவனை அவள்பாற் செல்ல விடுகின்றனர்.
விண்
ஏறு - இடி : அதன் வன்மை நோக்கி, 'ஏறு' என்ற ஆண்
பெயராற் கூறப்பட்டது. உரிமைக்கு - நான்காம் வேற்றுமை மூன்றாம்
வேற்றுமைப் பொருள் தந்தது. மிக்க + ஓர் = 'மிக்கவோர்' என வரவேண்டியது தொகுத்தல்
விகாரமாய் 'மிக்கோர்' என வந்தது.
கருணையன்
வன வாழ்க்கை
-
மா, கூவிளம், - விளம், - விளம், - மா.
| 54 |
அடைந்த வானவ
னறைந்தவை கேட்டெலி சபெத்தை
குடைந்த நோயுளங் கொடுந்தழல் குடித்தெனக் கொண்ட
மிடைந்த பாசறை பொறாமையில் வீழ்ந்தன ளுயிர்கெட்
டுடைந்த காலையி னுடனிலை விழுவது போன்றே. |
| |
அடைந்த வானவன்
அறைந்தவை கேட்டு எலிசபெத்தை
குடைந்த நோய் உளம் கொடுந் தழல் குடித்தெனக் கொண்ட
மிடைந்த பாசறை பொறாமையில் வீழ்ந்தனள், உயிர் கெட்டு
உடைந்த காலையின் உடல் நிலை விழுவது போன்றே. |
|