பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 97

ரீறாய் மாள்வான் கருணையனோ
     வெய்தி யவனை யொளிக்குது மென்
றாறா வன்போ டருந்தவனோ
     டறைந்தாள் கருணை நிலைசெஞ்சாள்
 
மாறா அருளோடு இன்னணமே, 'மறைந்த திரு எம் மகற் காணா,
தேறா வெகுளி அரசு எல்லாச் சிறுவர்க் கொல்வான். என்ன,உயிர்
ஈறாய் மாள்வான் கருணையனோ? எய்தி அவனை ஒளிக்குதும்''என்று
ஆறா அன்போடு, அருந் தவனோடு அறைந்தாள் கருணை நிலை
                                         நெஞ்சாள்.    

      இவ்விதமாகவே மாறாத அருளோடு கருணை நிலைத்த நெஞ்சம்
படைத்தவள் கன்னிமரியாள். கருணையனுக்கு நேரலாகும் துன்பத்தை அவள்
உணர்ந்து, அரிய தவத்தோனாகிய சூசையை நோக்கி, ''எசித்தில் வந்து
மறைந்து கொண்ட நம் திரு மகனைக் காணாத நிலையில், தெளியாத
சினத்திற்கு ஆளான அரசன் அங்குள்ள சிறுவர்களை யெல்லாம்
கொல்வான். எனவே, கருணையனும் அச்சிறுவரோடு சேர்ந்து உயிருக்கு
முடிவு நேருமாறு மடியக் கடவனோ? நாமே அங்குப் போய் அவனை
ஒளித்து வைப்போம்' என்று ஆறாத அன்போடு கூறினாள்.

 
                    53
வெருவின் மிக்கோர் ஒலித்ததெலாம்
     விண்ணே றென்பா ரன்னமறை
யுருவின் மிக்கோ னெய்தியவன்
     புரிமைக் கஞ்சி மறுத்தமையாற்
செருவின் மிக்கோ னுணர்ந்தபகை
     செப்பிச் சிறுவ னொளிக்குபவான்
றிருவின் மிக்கோர் வானவனைச்
     செலுத்து கின்றா ரருண்மிக்கார்.