|
எலிசபெத்தை
அவ்வாறு தளர்ந்திருந்த வேளையில் வானவர் வந்து,
எரோது மன்னன் குழந்தைகளையெல்லாம் வெட்டிக் கொன்றான் என்று
கூறியமையால் தன் உள்ளம் வருந்த அதனைக் கேட்டு அறிந்தாள் அரிய
இரக்கமுள்ள ஆண்டவன் தன் மகனைச் சாவினின்று காத்தமையால்,
அவ்வாண்டவன் புகழைத் திருத்தமாக நெடுநாள் வாழ்த்திக் கூறி, காட்டில்
வாழும் துன்பத்தைப் பொறுமையோடு தாங்கி, உறுதி நிலையிற் சிறந்தாள்.
எலிசபெத்தை அறிவுரை
| 63 |
காட்சி யோடுள
வறத்தொகை யனைத்துமே கதிர்செய்
யாட்சி யோடுடு வம்புலி தொடர்ந்தெனத் தொடர
மாட்சி யோடுயிர் வளர்ந்தன தன்மையி னிளைத்த
ஆட்சி யோடினிப் புணர்வது மரிதென வறிந்தாள். |
| |
காட்சியோடு
உள அறத் தொகை அனைத்துமே, கதிர் செய்
ஆட்சியோடு உடு அம்புலி தொடர்ந்தெனத் தொடர,
மாட்சியோடு உயிர் வளர்ந்தன தன்மையின் இளைத்த
பூட்சியோடு இனிப் புணர்வதும் அரிது என அறிந்தாள்.
|
கதிரொளி
வீசி இரவை ஆளும் தன்மையோடு விண்மீன்கள்
மதியைத் தொடர்ந்தது போல, தெய்வக் காட்சியோடு உலகிலுள்ள
புண்ணியம் அனைத்துமே தொகையாக எலிசபெத்தையைத் தொடர்ந்தன,
அத்தகைய மாட்சியோடு உயிர் வயதில் வளர்ந்தது. அத்தன்மையால் உடல்
மெலிந்தது. அவ்வுயிர் இளைத்து உடலோடு இனிமேலும் பல நாள்
கூடியிருத்தல் அரிதென அவள் அறிந்தாள்.
தெய்வக்
காட்சிக்குச் சந்திரனும், பிற அறங்களுக்கு விண் மீன்களும்
உவமை.
| 64 |
சொரிந்த
தேனினுஞ் சுவைகொடன் னுயிரினு மினிமை
புரிந்த சேயொடு புகல்செயா கண்டுகண் டுருகிப்
பிரிந்த காலையிற் பெருந்துய ருள்ளியுள் ளயர்ந்து
விரிந்த காட்சியிற் றுணிந்தபின் குழவியை விளித்தாள் |
|