சொரிந்த தேனினும்
சுவை கொள் தன் உயிரினும் இனிமை
புரிந்த சேயொடு புகல் செயா, கண்டு கண்டு உருகி,
பிரிந்த காலையில் பெருந் துயர் உள்ளி உள் அயர்ந்து,
விரிந்த காட்சியின் துணிந்த பின் குழவியை விளித்தாள். |
பெய்த தேனைக் காட்டிலும் சுவை கொண்டவனும்
தன் உயிரைக்
காட்டிலும் தனக்கு இனிமை தந்தவனுமாகிய மகனிடம் தான் இறக்கவிருக்கும்
செய்தியைச் சொல்லாமலே எலிசபெத்தை அவனைப் பார்த்துப் பார்த்து
உருகினாள். அவனைத் தான் பிரிந்த காலத்து அவனுக்கு ஏற்படும் பெருந்
துயரை நினைந்து நினைந்து சோர்ந்தாள். பின், தன் கண்முன் விரிந்து நின்ற
தெய்வக் காட்சியால் துணிந்து தன் குழந்தையை அழைத்தாள்.
| 65 |
இனிய
யாவினு மினியவென் றனயனே யுன்னைக்
கனிய வீன்றநாள் கருதிய செல்கதி செல்ல
நனிய வாவிய நாளிதே யிதுதிரு வுளமாய்
முனிய மாறுமோ முரிந்தழ மாறுமோ மகனே. |
| |
''இனிய யாவினும்
இனிய என் தனையனே, உன்னைக்
கனிய ஈன்ற நான் கருதிய செல்கதி செல்ல
நனி அவாவிய நாள் இதே. இது திரு உளமாய்
முனிய மாறுமோ? முரிந்து அழ மாறுமோ, மகனே? |
''இனிமையான
யாவற்றிலும் இனிமையான என் மகனே உன்னைக்
கனிவோடு பெற்ற நான் எப்போதும் கருதித் தேடியிருந்த பரகதி செல்ல
மிக விரும்பிய நாள் இதுவே ஆகும். இது கடவுள் திருவுளமாயின், சினம் கொள்வதனால் மாறுமோ?
ஒடிந்து அழுவதனால்தான் மாறுமோ,மகனே?
'அவாவிய
நாள் இது' என்றது, அந்நாள் வந்து விட்டது என்பதனை
மறைத்துச் சொல்லியது.
| 66 |
மற்றி
யாதுயான் வகுப்பவும் வயதொரு நான்கு
முற்றி யாகுமுன் பிரிவதென் றயர்விலை முன்னர்
பெற்றி யேயுணர் வனைத்தையும் பிறக்குமுன் வரஞ்சால்
புற்றி யேயுரைக் குயர்ந்தவற் குவகைசெய் யருளோய். |
|