பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 105

''மற்று யாது யான் வகுப்பவும்? வயது ஒரு நான்கு
முற்றி ஆகும் முன் பிரிவது என்று அயர்வு இலை. முன்னர்
பெற்றியே உணர்வு அனைத்தையும்! பிறக்கு முன் வரம் சால்பு
உற்றியே, உரைக்கு உயர்ந்தவற்கு உவகை செய் அருளோய்!


      ''உரைக்கு அடங்காது உயர்ந்த ஆண்டவனுக்கு மகிழ்ச்சி யூட்டும்
அருள் உடையவனே, உனக்கு நான் வகுத்துச் சொல்ல வேறு யாது உளது?
நான்கு வயது முடியு முன்னே உன்னைப் பிரிவது பற்றி எனக்குச் சோர்வு
ஒன்றுமில்லை. ஏனென்றால், வயது வருவதற்கு முன்னரே அறிவு
அனைத்தையும் நீ பெற்றுள்ளாயே! பிறக்கு முன்னரே வரங்களால் நிறைவு
பெற்றுள்ளாயே!

 
                     67
திலங்க லந்தமா செல்லிடத் துறைவது மெண்ணே
லலங்க லந்ததே னனையதீஞ் சொல்லொடு வஞ்சச்
சலங்க லந்தசால் தகுதிகொள் மாக்கடந் துணையிற்
புலங்க லந்தகான் பொதிர்விலங் கினத்துணை யினிதே.
 
''திலம் கலந்த மா செல் இடத்து உறைவதும் எண்ணேல்
அலம் கலந்த தேன் அனைய தீம் சொல்லொடு வஞ்சச்
சலம் கலந்த சால் தகுதி கொள் மாக்கள் தம் துணையின்
புலம் கலந்த கான் பொதிர் விலங்கு இனத் துணை இனிதே.

      ''மஞ்சாடி மரங்கள் கலந்து, விலங்குகளே செல்லும் காட்டிடத்தே
தங்க நேர்ந்தது பற்றிக் குறையாய் எண்ணாதே சஞ்சலம் கலந்ததாயினும்
புறத்தே தேன் போன்ற இனிய சொல்லோடு மனத்தில் வஞ்சகப் பொய்
கலந்த மிக்க தகுதி கொண்ட மக்களின் துணையை விட, உணர்வுப் புலமும்
செயற்பலமும் ஒரே தன்மையாய்க் கலந்து காட்டில் மிகுந்து வாழ்கின்ற
விலங்கு இனத்தின் துணை இனிமை யானதே.

      'சால் தகுதி' என்றது இகழ்ச்சிக் குறிப்பு. உள்ளும் புறமும் வேறுபட்ட
மனிதத் துணையினும், அவை ஒன்றுபட்ட விலங்கினத் துணையின் தன்மை
வெளிப்படத் தெரிதலால் சிறந்ததென்பது கருத்து. 'சஞ்சலம்' வஞ்சகம்
வெளிப்பட்டு விடுமோ வென்ற அச்சத்தால் அமைவது.