பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 116

     விழுந்த கொம்போடு அதனைப் பற்றிப் படர்ந்த கொடியும் விழுந்தது
போல, இறந்த தாயோடு தானும் இறந்தாற் போலத் தரையில் விழுந்த
மகனாகிய கருணையன் தன் உள்ளத்துக் கொண்ட ஆழ்ந்த துன்பத்தைப்
பொறுக்க இயலாதவனாயினான்; ஒரே வாள் இரண்டு உயிர்களைப் பிளந்த
தன்மையாய்த் தாய் அருகே கிடந்தான்.

     ஒரே வாள் ஈருயிர் பிளக்கும் செய்தி 25 : 77 இல் காண்க.

 
            88
தேற்ற ருந்துயர் தேற்றிய வானவ
ரேற்ற ருந்துணை யாகவெ ழுந்துயி
ராற்ற ரும்பரி வாயுடனாடல் போற்
போற்ற ருந்துயர் கொண்டுபு லம்பினான்.
 
தேற்ற அருந் துயர் தேற்றிய வானவர்
ஏற்று அருந் துணை ஆக, எழுந்து, உயிர்
ஆற்ற அரும் பரிவாய் உடல் நாடல் போல்,
போற்ற அருந் துயர் கொண்டு புலம்பினான்.

     தேற்றுவதற்கு அரிய துயரத்தைத் தேற்றிய வானவர் அரிய
துணையாகக் கருணையனை ஏற்றுத் தூக்கியெடுக்க, அவன் எழுந்தான்;
எனினும், பொறுத்தற்கரிய ஆர்வத்தோடு உயிர் உடலைத் தேடுதல் போல,
விலக்குதற்கு அரிய துயர் கொண்டு தன் தாயைத் தேடிப் புலம்பினான்.

 
                89
பருகு தேனினைக் கான்றெனப் பண்ணிசைக்
கருகு தேனினு மின்பளி பாடிய
முருகு தேனொடு முற்றலர் பூவன
முருகு வானிளை யோனுளத் தேங்கினான்.
 

பருகு தேனினைக் கான்றென, பண் இசைக்கு
அருகு தேனினும் இன்பு அளி பாடிய
முருகு தேனொடு முற்று அலர் பூ வனம்
உருகு வான் இளையோன் உளத்து ஏங்கினான்.


     வண்டு தான் பருகிய தேனைக் கக்கினாற் போல, யாழ் இசைக்கு
நிகராகவும் தேனினும் இனிதாகவும் அப்பூவின் அருகே பறந்து பாடும்,