|
அவ்வாறு பாடிக் கொண்டிருந்த
பூஞ்சோலை மணம் பொருந்திய தேனோடு
முற்றும் மலர்ந்து நின்றது. அப்பூஞ்சோலையே உருகுமாறு சிறுவனாகிய
கருணையன் தன் உள்ளத்தில் ஏங்கினான்.
உருகுவான்
- உருக; வான் ஈற்று எதிர்கால வினையெச்சம்.
| 90 |
புல்லு
டம்புபு தைத்தன பேருயிர்
வில்லு டம்பென வேய்ந்தன காட்சியாற்
கொல்லு டம்பிடி கொண்டுகு டைந்தபுண்
ணல்லு டம்பெனத் தேறிந டந்ததே. |
| |
புல் உடம்பு புதைத்தன
பேருயிர்
வில் உடம்பு என வேய்ந்தன காட்சியால்,
கொல் உடம்பிடி கொண்டு குடைந்த புண்
நல் உடம்பு எனத் தேறி நடந்ததே. |
கருணையனின்
சிறிய உடம்பிற்குள் புதைக்கப்பட்டிருந்த
பெருமைக்குரிய உயிர் ஒளி வீசும் உடம்பு போல அழகு செய்யப்பெற்று
ஒரு காட்சியைக் கண்டது. அதனால், கொல்லுந் தன்மையுள்ள கைவேலால்
குடைந்த புண் அறவே மாறி நல்லுடம்பு பெற்றது போல் தேறி நடந்தது.
'உயிர்
தேறி நடந்தது' என்றாரெனினும், அவ்வயிருக்கு உரியான்
தேறி நடந்தானென்பது கருத்து. புதைத்தன, வேய்ந்தன என்ற ஈரிடத்தும்
இடையே 'அன்' சாரியை.
எலிசபெத்தை
அடக்கம்
-
விளம், - மா, தேமா, - விளம், - மா, தேமா
| 91 |
கதிர்செயு
முருவிற் றோன்றிக்
கனிவொடு
சூழ்ந்த விண்ணோ
ருதிர்செயுங் கனிபோல் வீழ்ந்த
வுடற்குநன்
முறைகள் யாவு
முதிர்செயு மன்பின் பாலான்
முடித்தபின்
குழவி மோனன்
பொதிர்செயு முளத்தைத் தூண்டும்
புரிவிறன்
முறைக டேர்ந்தான். |
|