கதிர் செயும்
உருவின் தோன்றிக் கனிவொடு சூழ்த்த விண்ணோர்
உதிர் செயும் கனி போல் வீழ்ந்த உடற்கு நன் முறைகள் யாவும்
முதிர் செயும் அன்பின் பாலால் முடித்தபின், குழவி மோனன்
பொதிர் செயும் உளத்தைத் தூண்டும் புரிவில் தன் முறைகள்
தேர்ந்தான்.
|
கதிர்
வீசும் உருவத்தோடு தோன்றிக் கனிவோடு சூழ்ந்து நின்ற
வானவர், உதிர்ந்த பழம் போல் விழுந்து கிடந்த எலிசபெத்தையின்
உடலுக்கு நல்ல சடங்கு முறைகளெல்லாம் முதிர்ந்த அன்பின் தன்மையால்
செய்து முடித்தனர். அதன்பின், குழந்தை முனிவனாகிய கருணையன் தன்
உள்ளத்தைத் தூண்டும் மிக்க அன்பினால், மகனென்ற முறையில், தான்
செய்ய வேண்டிய சடங்கு முறைகளை நினைத்தான்.
'உளத்தைத்
தூண்டும் பொதிர் செயும் புரிவில்' என்று மாற்றிக்
கூட்டுக.
| 92 |
புன்மலர்க்
கண்க டூவும்
புனலினீ
ராட்டி மார்பிற்
பன்மலர்ப் படலைக் கண்ணி
பல்லறம்
புனைந்தா யென்று
தன்மலர்க் கரத்தாற் சூட்டிச்
சாய்பக
லொடுகுவ் வேடு
துன்மலர்க் கமலக் கையைத்
தொழக்குவித்
திறைஞ்சிட் டானே. |
| |
|
புன் மலர்க்
கண்கள் தூவும் புனலின் நீராட்டி, மார்பில்
பன் மலர்ப் படலைக் கண்ணி, ''பல் அறம் புனைந்தாய்'' என்று
தன் மலர்க் கரத்தால் சூட்டி, சாய் பகலோடு குவ்வு ஏடு
துன் மலர்க் கமலக் கையைத் தொழக் குவித்து இறைஞ்சிட்டானே.
|
தன்
சிறிய மலர் போன்ற கண்கள் தூவும் நீரினால் தாயின் உடலைக்
குளிப்பாட்டி, ''தாயே, நீ பல அறங்களையும் அணியாகக் கொண்டிருந்தாய்''
என்று வாழ்த்தினான். பலவகை மலர்களால் தொடுத்த படலை மாலையைத்
|