|
தன் மலர் போன்ற
கையால் அவள் மார்பில் சூட்டினான். பகல் சாய்ந்த
மாலை வேளையில் குவியும் இதழ்கள் செறிந்த தாமரை மலர் போன்ற
கையைத் தொழுத வண்ணமாய்க் குவித்து அவளை வணங்கினான்.
| 93 |
அளியழக்
குயில்கள் மஞ்ஞை
யயர்ந்தழ
வழவன் னங்கள்
கிளியழ வழப்பூம் பூவை
கிளையழ
விரங்கி வீசும்
வளியழப் புனலீண் டோடி
வந்தழ
வனத்தி லெல்லா
வுளியழ வழவே தோன்ற
லும்பர்மெய்
யெடுத்துப் போனார். |
| |
அளி அழ, குயில்கள்
மஞ்ஞை அயர்ந்து அழ, அழ அன்னங்கள்,
கிளி அழ, அழப் பூம் பூவை, கிளை அழ, இரங்கி வீசும்
வளி அழ, புனல் ஈண்டு ஓடி வந்து அழ, வனத்தில் எல்லா
உளி அழ, அழவே தோன்றல், உம்பர் மெய் எடுத்துப் போனார். |
வானவர்
எலிசபெத்தையின் உடலை அடக்கஞ் செய்ய எடுத்துப்
போனார். அது கண்டு வண்டுகள் அழுதன. குயில்களும் மயில்களும்
சோர்ந்து அழுதன. அன்னங்கள் அழுதன. கிளிகள் அழுதன. அழகிய
மைனாக்களும் அழுதன. மரக் கிளைகள் அழுதன. வீசும் காற்றும் இரங்கி
அழுதது. நீர் இவ்விடம் நோக்கி ஓடி வந்து அழுதது. வனத்திலுள்ள எல்லா
இடங்களும் அழுதன. மைந்தன் கருணையனும் கூடவே அழுதான்.
| 94 |
பூக்கையைக்
குவித்துப் பூவே
புரிவொடு
காக்கென் றம்பூஞ்
சேக்கையைப் பரப்பி யிங்கட்
டிருந்திய
வறத்தை யாவும்
யாக்கையைப் பிணித்தென் றாக
வினிதிலுள்
ளடக்கி வாய்ந்த
வாக்கையை யடக்கிப் பூவோ
டழுங்கணீர்
பொழிந்தான் மீதே. |
|