பூக் கையைக்
குவித்து, ''பூவே, புரிவொடு காக்க!'' என்று அம் பூஞ்
சேக்கையைப் பரப்பி, இங்கண் திருந்திய அறத்தை யாவும்
யாக்கையைப் பிணித்து என்று ஆக இனிதில் உள் அடக்கி வாய்ந்த
ஆக்கையை அடக்கி, பூவோடு அழும் கணீர் பொழிந்தான் மீதே |
கருணையன்
தன் மலர் போன்ற கையைக் குவித்து, ''மண்ணே,
இவ்வுடலை நீ அன்போடு காப்பாயாக!'' என்று கூறி, குழியினுள் அழகிய
பூம்படுக்கையைப் பரப்பி, இவ்வுலகில் திருந்திய அறங்கள் யாவற்றையும்
தன் உடலோடு கட்டி வைத்த தன்மையாக இனிதே தன்னுள் அடக்கி
வாய்ப்பான வாழ்க்கை நடத்திய எலிசபெத்தையின் உடலை மண் இட்டு
மூடி அடக்கி அதன்மீது பூவோடு தான் அழுத கண்ணீரையும் சேரப்
பொழிந்தான்.
'காக்க
+ என்று = காக்கவென்று என வரவேண்டியது 'காக்கென்று'
என வந்தது தொகுத்தல் விகாரம்.
| 95 |
தாய்முறை
திருந்தி யாக்கை
தகுமுறைக்
கடக்கிப் பின்றன்
னோய்முறை யடக்க லாற்றா
நுதலிய
தவத்தின் மாட்சி
தூய்முறை விரும்பித் தன்கட்
டுணையிலா
தஞ்சி யேங்கித்
தீய்முறை யழனெஞ் சொத்த
திரைச்சுனை
தனித்துச் சென்றான். |
| |
தாய் முறை திருந்தி,
யாக்கை தகு முறைக்கு அடக்கி, பின் தன்
நோய் முறை அடக்கல் ஆற்றா, நுதலிய தவத்தின் மாட்சி
தூய் முறை விரும்பி, தன்கண் துணை இலாது அஞ்சி ஏங்கி,
தீய் முறை அழல் நெஞ்சு ஒத்த திரைச் சுனை தனித்துச் சென்றான். |
கருணையன்
தன் தாய்க்குச் செய்ய வேண்டிய கடமைகளையெல்லாம்
திருந்தச் செய்து, அவள் உடலைத் தகுந்த முறையில் அடக்கஞ் செய்து,
பின் தன் தனிமைத் துன்பத்தைத் தாங்க இயலாதவன் ஆனான். தான்
கருதிய
|