|
துயரிடைப்
பிறந்த ஞானம்
| 97 |
மண்ணரம்
பிசையிற் பாடல்
மாறிவண்
டிரங்கி விம்ம
வுண்ணரம் பழுத்த தன்மைத்
துருக்குயி
லழுது தேம்ப
விண்ணரம் பருளின் மார்பன்
விழுங்கிய
துயர்கால் வான்போற்
பண்ணரம் பிளகி யேங்கும்
பரிசென
விம்மிச் சொல்வான் |
| |
மண் நரம்பு இசையின்
பாடல் மாறி வண்டு இரங்கி விம்ம,
உள் நரம் பழுத்த தன்மைத்து உருக் குயில் அழுது தேம்ப,
விண் நரம்பு அருளின் மார்பன் விழுங்கிய துயர் கால்வான் போல்,
பண் நரம்பு இளகி ஏங்கும் பரிசொடு விம்மிச் சொல்வான். |
ஒப்பனை
செய்த நரம்புக் கருவியின் இசை போல் பாடும் நிலை மாறி
இரங்கி வண்டுகள் விம்மவும், அழகிய உருவம் படைத்த குயில்கள் தம்
மனத்துள் அச்சம் முதிர்ந்த தன்மையாய் அழுது தேம்பவும், விண்ணக
வாழ்விற்கு நாடித் துடிப்பு போன்ற அருள் கொண்ட மார்பை உடைய
கருணையன் தன்னை விழுங்கிய துயரத்தை கக்குவான்போல், நரம்பு
தளர்ந்து யாழ் ஏங்கும் தன்மையோடு பெருமூச்செறிந்து சொல்வான்.
| 98 |
சொல்லிய
விசையின் பெட்போ
துயரமோ
வியப்போ வேதோ
புல்லிய கொம்பிற் புள்ளும்
பூவில்வண்
டினமுங் காற்று
மில்லிய புனலும் மற்ற
யாவும்வாய்
விடாமை கேட்பக்
கல்லிய கவிர்ச்செவ் வாயான்
கருதிய
துயரங் கான்றான். |
|