|
101 |
|
உலைவளர்
தீயிற் றீய
வுலைப்பிடும்
பாவத் தீர்ந்து
கலைவள ருணர்வு ஞானக்
காட்சியு
முணரா தெய்தி
யலைவள ருலகி லொவ்வா
வதிசயத்
தென்றாய் வையின்
மலைவளர் வெள்ள மென்ன
வரத்தொகை
யுவப்பக் கொண்டேன்
|
| |
''உலை வளர்
தீயின் தீய உலைப்பு இடும் பாவம் தீர்ந்து,
கலை வளர் உணர்வும் ஞானக் காட்சியும் உணராது எய்தி,
அலை வளர் உலகில் ஒவ்வா அதிசயத்து என் தாய் வையின்
மலை வளர் வெள்ளம் என்ன வரத் தொகை உவப்பக் கொண்டேன். |
''உலையில்
வளரும் நெருப்பைப்போல் தீயுமாறு வருத்தம் தரும்
பாவம் அவ்வாறு தீரப் பெற்று, கலை வளர்வதற்கான உணர்வும் தெய்வக்
காட்சியும் கற்றுணராமலே அடைந்து, அலை வளர்கின்ற கடல் சூழ்ந்த
இவ்வுலகில் நிகரற்ற புதுமையாக என் தாயின் வயிற்றிடத்திருந்தே மலையில்
வளரும் ஆற்று வெள்ளம் போல் தொகையான வரங்களை மகிழுமாறு
பெற்றுக் கொண்டேன்.
வயின்
- இடம். அது செய்யுளோசைக்காக 'வையின்' என நின்றது.
| 102 |
தூங்குயர்
கனிகள் தீம்பாற்
றோயவீழ்ந்
தென்றோ வானி
னீங்குயர் துளிமுத் தாக
நிறத்தசங்
கிடைவீழ்ந் தென்றோ
பாங்குயர் வரத்தி லென்னைப்
பயந்ததா
யுதர நீங்க
வோங்குய ரிறைவன் சாயு
மொண்கரத்
திமிழிற் சாய்ந்தேன். |
|