''தூங்கு உயர்
கனிகள் தீம் பால் தோய வீழ்ந்து என்றோ, வானின்
நீங்கு உயர் துளி முத்துஆக நிறத்த சங்கிடை வீழ்ந்து என்றோ,
பாங்கு உயர் வரத்தில் என்னைப் பயந்ததாய் உதரம் நீங்க,
ஓங்கு உயர் இறைவன் சாயும் ஒண் கரத்து இமிழின் சாய்ந்தேன். |
''கிளைகளில்
தொங்கிய உயர்தரக் கனிகள் இனிய பாலில் தோய
விழுந்தது போலவே, உயர்ந்த வானத்தினின்று நீங்கிய பனித் துளி
முத்தாக மாறும்படி, வெண்ணிறமுள்ள சங்கினுள் விழுந்தது போலவே,
உயர்ந்த தன்மையுள்ள வரத்தினால் என்னைப் பெற்ற தாயின் வயிற்றை
நீங்கப் பிறந்த போதே, மிகவும் உயர்ந்த இறைவன் குழந்தையாய்ப்
பிறந்து, சாயும் ஒளி பொருந்திய கன்னி மரியாளின் கையில் நானும்
இன்பமாகச் சாய்ந்து கொண்டேன்.
பனித்
துளி சங்கினுள் விழுந்து முத்தாகுமென்பது ஒரு நம்பிக்கை.
வீழ்ந்தது + என்றோ = 'வீழ்ந்ததென்றோ' என வர வேண்டியது,
தொகுத்தல் விகாரமாய் 'வீழ்ந்தென்றோ' என வந்தது.
| 103 |
மைவகை தளிர்த்த
பாவ
வடுவொடு
சனித்த நானுட்
பொய்வகை யன்றிப் பேறு
புணர்கில
னாகி யெந்தை
மெய்வகை தெளிந்த ஞானம்
விளை
த்தபல் வரங்க டந்தே
உய்வகை தந்த தன்மை
யுரைப்பவோ
மூகை நானே. |
| |
''மை வகை தளிர்த்த
பாவ வடுவொடு சனித்த நான், உள்
பொய் வகை அன்றிப் பேறு புணர்கிலன் ஆகி, எந்தை
மெய் வகை தெளிந்த ஞானம் விளைந்த பல் வரங்கள் தந்தே
உய் வகை தந்த தன்மை உரைப்பவோ மூகை நானே? |
''மயக்கமாகித்
தோன்றிய பாவ வடுவோடு தாய் வயிற்றில் தோன்றிய
நான், பொய்யின் வகையைச் சார்ந்திருத்தலேயன்றி நற்பேறு ஒன்றும்
சேராதிருக்கையில், என் தந்தையாகிய இறைவன் மெய்யின் வகையைத்
|